பக்கம்:தரும தீபிகை 5.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1790 த ரும தீபிகை

இனிய மலர்களை விரைந்து பெற விரும்பினவன் முதலில் முள்ளுகளால் தாக்கப்படுகின்ருன்” என்னும் இது இங்கே நோக்க வுரியது. அருமையுடையது எளிமையில் அமையாது.

பெரும் பிரயாசையால் அடைகலினலேதான் புகழ் அரு மையும் பெருமையும் இனிமையும் உடையதாய் யாண்டும் மருவியுள்ளது. வேண்டி அடைந்தது வியன் சுவை நீண்டது. “Sweet is pleasure after pain.” (Dryden) :உற்ற வருத்தத்திற்கு பின்பு தான் பெற்ற சுகம் பெரிதும் இனிமையாயிருக்கிறது” என ட்ரைடன் என்னும் ஆங்கில அறி ஞர் உழைப்பின் சுவைநுகர்ச்சியை இங்கனம் குறித்திருக்கிரு.ர். “No pains, no gains.”

உழைப்பு இன்றேல் ஊதியம் இல்லை”

என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது. உடலுக்கு ஊதியம் ஆன பொருளை அடைவதினும் உயிருக்கு ஊதியமான புகழை அடைவது மிகவும் அருமையாம். அரிய ஆண்மையுடைய விழுமிய மேன்மையினரே புகழை அடைய நேர்கின்ருர். புகழ் பெறுவது வித்தகத் திறலாப் விளங்கியுளது. உண்மையான புகழைப் பெற முடியாதவரும் வெறும் புகழ் மொழியால் உள்ளம் உவந்து கொள்ளுகின்ருர். புகழ்ச்சி யான வார்த்தை எந்த மனிதனுக்கும் மகிழ்ச்சியை விளைத்து விடுகின்றது. இகழ்ச்சியாளனும் அதற்கு எங்கி நிற்கின்ருன். “Praise enough to fill the ambition of a private man.” [Cowper] "ஒரு மனிதனுடைய அந்தரங்க ஆசையைப் பூர்த்தி செய் யப் புகழ்ச்சி மொழி ஒன்றே போதும்” எனக் கவுப்பர் என் னும் ஆங்கிலக் கவிஞர் இங்கனம் ஆய்ந்து கூறியிருக்கிரு.ர். ஆன்ம தாகத்தை அடக்கி ஆனந்தம் புரிந்து வருதலால் புகழில் ஏதோ ஒரு கனியான இனிமை மருமமாய் மருவியுள்ளது என அனுபவ நிலையில் நுணுகி இனிது உணர்ந்து கொள்கிருேம். Fame is the spur that the clear spirit doth raise. (Milton)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/251&oldid=1326809" இலிருந்து மீள்விக்கப்பட்டது