பக்கம்:தரும தீபிகை 5.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1791

புகழ்ச்சி மனிதனுக்கு எழுச்சியை ஊட்டும் கருவியாயுள் ளது” என மில்ட்டன் இவ்வாறு குறித்திருக்கிருர். ஒருவனேப் புகழ்ந்து கூறின் அவன் விரைந்து காரியம் செய்ய நேர்கின்ருன்.

தன் தகுதிக்கு மிஞ்சிய காரியத்தையும் புகழின் கசையால் மனிதன் செய்யத் துணிகின்ருன். புகழ் மொழி கூறித் தாண்டி யபொழுது பேடியும் விரன் போல் போரில் மூண்டு பாய்ந்து மாண்டுபட நேர்கின்ருன். அதில் ஒரு மாய மோகம் மருவியுளது. “Folly loves the martyrdom of Fame.” (Вyron) "புகழ் மருவிய மரணக்கை மடையனும் அடைய விரும்பு கிருன்’ என ஆங்கிலக் கவிஞராகிய பைரன் இங்கனம் பாடி யிருக்கிரு.ர். இசையின் கசையால் இனிய உயிரையும் விடுகிருன். மனித சமுதாயத்துக்கும் புகழுக்கும் உள்ள உறவுரிமை யும், அகன்பால் அது கொண்டுள்ள ஆவலும் மோகமும் செயல் இயல்களால் பலவகைகளிலும் தெரிய வந்துள்ளன. தன்னை உரிமையாக உடையவனே மண்ணுலகமும் விண்ணு லகமும் பெருமையாக எண்ணித் துதிக்கும்படி செய்தருளுக லால் புகழ் எவ்வளவு மகிமையுடையது' என்பதை எளிதே உணர்ந்துகொள்ளலாம். சிறந்த பிறவிப் பேருகவும், உயர்ந்த உயிர் ஊதியமாகவும் புகழ் உவந்து போற்றப்பட்டுள்ளது. அதனை அடைந்துகொள்ளுவதில் அரிய பல பொருள்களையும் இனிய உயர் நிலைகளையும் பெரியோர் துறந்து விடுகின்றனர்.

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்' (புறம்) என விழுமிய மேலோரது கிலேமையைக் குறித்து இளம் பெரு வழுதி என்னும் பழம்பெரும்புலவர்.இவ்வாறு விளம்பியிருக்கிரு.ர்.

இத்தகைய புகழைப் பெற்றவர் எத்தகையோரும் வியந்து போற்ற யாண்டும் வித்தகராப் விளங்கி நிற்கின்றனர். அரிய புகழ் பெரிய மாட்சியாப் ஆட்சி புரிகிறது. "புகழ்ச்சியான் போற்ருதார் போற்றப்படும்' I (கான்மணிக்கடிை க) புகழுடையானேப் பகைவரும் போற்றுவர் என இது புகழ்ச் திருக்கிறது. பொன்னினும் புகழ் வலியுடையதாய் மன்னியுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/252&oldid=1326810" இலிருந்து மீள்விக்கப்பட்டது