பக்கம்:தரும தீபிகை 5.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1792 தரும தீபிகை இன்னவாறு புகழ் மனிதனுக்கு அதிசய மகிமையாய் அமைந்திருத்தலால் அதனை எ வரும் உரிமையோடு மருவிக்கொள் ளவேண்டும். ஒருவனுடைய உருவத் தோற்றத்துக்கு இட்ட பெயர் புகழோடு ஒட்டியபொழுது அது உயர்வாய் ஒளிவீசு கின்றது. பேர் சீரோடு சேரின் பாரோடு படர்கின்றது. ஊரும் நாடும் உலகமும் புகழ நேரின் அங்கப் பேர் பெருங் கீர்த்தியாய் விளங்க நேரும். நாடு புகழ ஒருவன் பீடு பெருது போயினும் தோன்றிய ஊர் அளவாவது புகழ்பெற வேண்டும். அதுகூடப் பெருன் ஆயின் அவன் தோற்றம் ஏற்றம் இழந்து தாற்றப்படும். உயிர்ப் பயன் இழந்தது துயர்ப்பட நேர்ந்தது. ஊன் உடம்பே உயிர் இல்லை. என்றது புகழ் இல்லாத புலையைப் புலப்படுத்தி நின்றது. புகழ் பெறவில்லையானல் அந்த மானுடன் வாழ்வு ஈனமா இழிந்து கழிகின்றது. உயிரின் ஒளியான புகழை அடையாதபோது அந்த மனிதன் உருவோடு உலாவித் திரிந்தாலும் ஒரு நடைப் பினமேயாவன். புகழ் பெருதவன் பழிபடிந்து பாழடைந்தான். உன் பிறப்பின் பெருமையை இழந்து சிறுமையாய்ப் போகாதே; சிறப்பான புகழை விரைந்து அடைந்து கொள்ளுக. 733. சீரும் சிறப்பும் செயலியல்க ளாகிவரின் பேரும் புகழும் பெருகியே-யாரும் o உவந்து புகழ உலகம் முழுதும் கிவந்து நிலவும் கிலேத்து. (e-) இ-ள். தன்னுடைய குணம் செயல்கள் சீரும் சிறப்பும் அமைக் துவரின் அவனிட்ம் பேரும் புகழும் பெருகி வரும்; அகனல் உலகம் புகழ்ந்து மகிழ அவன் உயர்ந்து விளங்குவான் என்க. இது புகழ் விளையும் புலன் உணர்த்துகிறது. எண்ணம் சொல் செயல் என்னும் இந்த மூவகை நிலைக ளாலேயே மனித சாதி இயங்கி வருகிறது. இம்மூன்றனுள்ளும் செயலே தலைமையாயுள்ளது. ஒருவனது நிலைமையை அளந்து அறிவதற்கு இது சிறந்த கருவியாப் எங்கும். விளங்கி நிற்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/253&oldid=1326811" இலிருந்து மீள்விக்கப்பட்டது