பக்கம்:தரும தீபிகை 5.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. புகழ் 1793 ஒருவனிடம் இதமான இனிய செயல்கள் நிகழ்ந்துவரின் மனித இனத்துள் அவன் தனி நிலையில் உயர்ந்து திகழ்கிருன். உலகமும் அவனை உவந்து புகழ்ந்து வருகிறது. பயனும் பண்பும் உடைய மனிதனை எவரும் வியனுக வியந்து பேசி வருதலால் அவனது ப்ேரும் புகழும் திசைகள்தோறும் விரைந்து பரவ நேர்கின்றன. அயிந்தன் என்பவன் ஒரு சிறந்த அறிஞன்; பெருங்தன்மை யாளன்: பேருபகாரி, ஆலஞ்சேரி என்னும் ஊரினன். நிறைந்த நிலபுலங்களையுடையவன்; இற்றைக்கு ஆயிரத்தெண்னுாறு ஆண் டுகளுக்கு முன்னர் இருந்தவன். அங்காளில் சங்கப் புலவர்களைப் பாண்டிய மன்னன் அன்போடு ஆதரித்து வருங்கால் நாட்டில் கொடிய பஞ்சம் தோன்றியது. அது கெடிது நீண்டு நின்றமை யால் சங்கத்தார் அங்கங்கே பிரிந்துபோக நேர்ந்தனர். அவருள் சிலர் இவனே வந்தடைந்தனர்; அந்தப் புலவர்களைக் கண்டதும் இவன் பெருமகிழ்ச்சிகொண்டு உரிமையோடு உவந்து உபசரித் தான்; தன்பால் இருந்தருளும்படி அன்பால் வேண்டினன். அவரும் ஆண்டு இசைந்திருந்தார். மதிநலமுடைய அவரை மிக வும் மரியாதையோடு இவன் பேணி வந்தான். பஞ்ச நிலையால் புலவர் பிரிந்துபோனதை கினேந்து வழுதி வேந்தன் வருந்தித் தன் பால் வந்தருளும்படி தாகரை எவினன். அவர் பல இடங்களிலும் தேடி அலைந்து முடிவில் இவனிடம் வந்து அரசன் எவியதை உரைத்தார். காவலன் ஆணையை அறிந்ததும் பாவலரை இவன் ஆவலோடு கொழுது வணங்கிப் பரிசில் பல தந்து வரிசை செய்து அனுப்பினன். அவர் அரசனே வந்து கண்டார். அவ ரைக் கண்டதும் பாண்டியன்ஆர்வம் மீதுார்ந்து அளவளாவினன். இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்? எவ்வாறு வாழ்ந்தீர்கள்? என்று அன்புரிமையோடு அவரது சேம நலங்களை விசாரித்தான். வேந்தன் அவ்வாறு வினவியபோது புலவர்கள் இந்த உபகாரி யின் நிலைமையை உள்ளம் உவந்து உரைத்தார். பாவலர் ஆதி லால் பாவால் மொழிக்கார். அது அயலே வருவது காண்க. “காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி வேலேயும் குளனும் வெடிபடச் சுவறித் தந்தையை மக்கள் முகம் பாராமல் வெந்த சாகம் வெவ்வேறு அருந்திக் 5 குணமுள தனேயும் கொடுத்து வாழ்ந்த 225

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/254&oldid=1326812" இலிருந்து மீள்விக்கப்பட்டது