பக்கம்:தரும தீபிகை 5.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1794 த ரு ம தி பி கை கணவனே மகளிர் கண் பாராமல் விழித்தவிழி எல்லாம் வேற்றுவிழி ஆகி அறவுரை இன்றி மறவுரை பெருகி உறைமறந்து ஒழிந்த ஊழி காலத்தில் IO தாய் இல்லவர்க்குத் தாயே ஆகவும் தந்தை இல்லவர்க்குத் தந்தையே ஆகவும் இந்த ஞாலத்து இடுக்கண் தீர வந்து தோன்றினன் மாகிதிக் கிழவன் நீலஞ் சேரும் நெடுமால் போல்பவன் 15 ஆலஞ் சேரி அயிந்தன் என்பான் தன்குறை சொல்லான் பிறர்பழி உரையான் மறந்தும் பொய்யான் வாய்மையும் குன்ருன் இறந்து போகாது எம்மைக் காத்தான் வருந்தல் வேண்டாம் வழுதி 20 இருந்தனம் இருந்தனம் இடர்கெடுத்தனனே.” (சங்கப்புலவர்) அயிந்தனைக் குறித்துச் சங்கத்தார் இங்கனம் கூறியிருக் கின்றனர். மன்னனும் அவனை வியந்து மதித்து நயந்து மகிழ்க் தான். நேர்ந்த பஞ்சத்தின் நிலையையும், அல்லலான அங்கக் காலத்தில் புலவர்களை அவன் உரிமையோடு போற்றி வந்துள்ள வகையையும், அவனுடைய குண நலங்களையும் இதல்ை அறிந்து மகிழ்கிருேம். கவியைக் கருதிக் கானுவார் அரிய பல சுவை களே உணர்ந்து உரிய நிலைமைகளை ஒர்ந்து உவந்து கொள்ளுவார். மறந்தும் பொய்யான்; இறந்து போகாது எம்மைக் காத்தான் என்றது அவனது உத்தம கிலேயையும் உபகார நீர்மையையும் அரிய பல சீர்மைகளையும் நன்கு உணர்த்தியுள்ளது. ஈகை இயல்பும், இனிய பண்பாடும் மனிதனே அதிசய நிலை யில் உயர்த்தியருளுகின்றன. அங்கனம் உயர்ந்தவனே உலகம் என்றும் உவந்து போற்றுகின்றது. அயிந்தன் மறைந்து பதி னெட்டு நூற்ருண்டுகள் ஆயின. இன்றும் அவனே வியந்து புகழ்கின்ருேம்; விழைந்து மகிழ்கின்ருேம். புகழ்ச்சியும் மகிழ்ச் சியும் பொங்கிவரப் புனித நிலையில் அவன் பொலிந்து நிற்கின் முன். யாதும் கிலையில்லாத உலகில் புகழ் கிலைத்து நிலவுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/255&oldid=1326813" இலிருந்து மீள்விக்கப்பட்டது