பக்கம்:தரும தீபிகை 5.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1795, சிறந்த புலவர்கள் உவந்து பாடும்படியான புகழை ஒரு வன் அடைந்துகொள்வான் ஆயின் அவன் என்றும் நித்திய வேளுப் நிலைத்து வாழ்கின்ருன். ஒருவனது பிறப்பின் தோற்றம் புகழால் சிறப்பாய் ஏற்றம் பெறுகிறது. அப்பேறு பெற்றவர் என்றும் அழியாக விழுமிய நிலையில் என்ருக நின்று நிலவுகின்ருர். உற்ற ஊனுடம்பு இடையே அழிந்துபோகிறது; பெற்ற புகழ் 昏T ஞ்ஞான்றும்.அழியாமல் யாண்டும் மேன்மையாப் நீண்டு நிற்கிறது; ஆகவே அது அதிசயமாய்த் துதிசெய்ய வந்தது. ஒருவனது இரண்டு யாக்கை ஊன்பயில் நரம்பின் யாத்த உருவமும் புகழும் என்ருங்கு அவற்றினுள் ஊழின்வந்து மருவிய யாக்கை ஈங்கே மறைந்துபோம் மற்ற யாக்கை திருவமர்ந்து உலகம் ஏத்தச் சிறந்துபின் கிற்கும் அன்றே. (சூளாமணி) உடல் அழிந்துபோம்; புகழ் அழியாது என இது உணர்த் தியுள்ளது. இத்தகைய விழுமிய புகழை மனிதன் அடைந்து கொள்ளவேண்டும். அது புனித போகமா யினிமை புரியும். - = - 733. மண்ணில் பிறந்த மகன்கீர்த்தி மாைைல் விண்ணில் பிறந்த விரிகதிர்போல்-எண்ணும் உலகமெலாம் ஓங்கி ஒளிர்வான் மனுவின் திலகமே யாவன் தெளி. (க) - இ-ள். இம்மண்ணுலகில் பிறந்த ஒரு வ ன் கீர்த்தியுடையவன் ஆல்ை விண்ணுலகில் விளங்கும் சூரியன்போல் எங்கும் பேர் ஒளி விசிப் பெருமையாப் விளங்குவான்; மனித இனத்தின் இனிய திலகமாப் அவன் கனியே உயர்ந்து மிளிர்வான் என்க. அறிவுடைய அரிய பிறப்பை மனிதன் மருவி வந்துள்ளான்; அங்கனம் வக்கவன் உரிமையாய் அடைய வுரியது இனிய புக ழேயாம். உற்றபிறப்பு பெற்றபுகழால் பெருஞ்சிறப்படைகிறது. மகன் என்னும் சொல் அதன் தகவு தெரிய வந்தது. மனி தன் எதையும் அடையலாம்; உயர்கதிகள் எல்லாம் அவனுக் காகவே அமைந்திருக்கின்றன. மகன் சிறிது உயர்ந்தால் டிகான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/256&oldid=1326814" இலிருந்து மீள்விக்கப்பட்டது