பக்கம்:தரும தீபிகை 5.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1796 த ரும தி பி ைக ஆகலாம். அந்த உயர் ஆக்கத்தை அகன் பெயர் அமைதி துலக் கிகிற்கிறது. மானவன் நிலை மகிமை மிக வாய்ந்தது. குணங்களால் உயர்ந்த போதுகான், மனிதன் உண்மை யான உயர்ச்சியை அடைகிருன். ஏற்றம் என்று புகழுக்கு ஒரு பெயர். கீழ்மை நீங்கி மேன்மையில் ஓங்கி மேலே ஏறிப்போவது எற்றம் என எய்ந்தது. அந்த எற்றம் பெறுவதே இசைமையாம். ஏற்றம் கியாதம் இசை மேம்பாடு சீர்த்தி கீர்த்தி சொல் திகழ் புகழாம்; மீ.க்கூற்று என்று விளம்பவும் பெறுமே. (பிங்கலங்தை) புகழுக்கு இவ்வாறு பெயர்கள் அமைந்துள்ளன. பரியாய நாமங்கள் சரியான காரணங்களைக் கருதி வந்திருக்கின்றன. கீர்த்தி, சீர்த்தி என்பன சிறந்த புகழை வரைந்து காட்டி யுள்ளன. மேலாக வியந்து கூறுவது மீக்கூற்று என வந்தது. "ஊற்றமாம் சீர்த்தி கீர்த்தி ஒளிபுகழ் மீக்கூற்றும்பேர் மேற்றிகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இருபேராமே,' -- (கிகண்டு) புகழுக்கு உரிய பெயர்களை இங்கனம் அறிந்துகொள்கி ருேம். நெடிய பெரிய புகழையே சீர்த்தி என்று கனியே விதந்து சொல்ல வேண்டும் என்பதும் ஈண்டுத் தெரியவந்தது. 'சீர்த்தி மிகுபுகழ். (தொல்காப்பியம், சொல், உரி, 15) என ஆசிரியர் கொல்காப்பியகுரும் இவ்வாறு குறித்துள்ளார். தக்க பொருளைக் ககுதியான சொல்லால் தகவோடு கூற வேண்டும் என மேலோர் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. உரிய இடத்தில் உரிய சொல் வைப்பது அரிய கலையாய் அமைந்துள்ளது ஆகலால் அங்ங்னம் வையாகாரை வெய்யர் எனக் கலையின் தெய்வம் கடுத்து வைது வெறுத்து விடுகிறது. o 'மனு என்னும் வயங்கு சீர்த்திக் குன்று ஒன்று கோளான்.” என ஆதி மனுவைக் குறித்து இங்ஙனம் சிறப்பாக ஒதியுள்ளார். "தகவுடையோர் சிங்தையினும் சென்னியினும் விற்றிருக்கும் சீர்த்தியான்.” - (இராமா, குக, 82) பாகனே இவ்வாறு கவிச்சக்கரவர்த்தி குறித்திருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/257&oldid=1326815" இலிருந்து மீள்விக்கப்பட்டது