பக்கம்:தரும தீபிகை 5.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1800 த ரும தீபிகை பழுதில் செய்யுள் எழுதினன் அதல்ை புகழ்ச்சி விருப்பன் போலும் இகழ்ச்சி அறியா என்பணி வானே.” (நால்வர் நான்மணி, 24) இங்கப் புகழ்ச்சிப் பாடலின் உல்லாச வினேகத்தை ஊன்றி உணர வேண்டும். ஒரு கலையும் உணரான்; கண்களும் கைகளும் சரியாயில்லை; அப்படியிருந்தும் திருவாசகத்தைப் பேராசை யோடு ஈசன் எழுதிக்கொண்டார். தன்னைப் புகழ்ந்து பாடிய நூல் ஆகலால் அதனை உலகம் எல்லாம் உவந்து காணவேண்டும் என்னும் கசையிஞலேயே அவ்வாறு விழைந்து செய்தார்; ஆகவே அவர் புகழ்ச்சி விருப்பன் போலும் என இகழ்ச்சிச் சுவையில் கவி புகழ்ந்து பாடியுள்ள இதை வியந்து காணுகி ருேம். புகழ் ஈசனையும் வசஞ்செய்யும் மகிமை யுடையது. வேதம் முதலிய கலைகள் யாவும் ஏதும் அறிய முடியாத அதிசய நிலையில் மருவியுள்ள பரம்பொருள்; சூரியன் சந்திரன் அக்கினி என்னும் ஒளிகளை விழிகளாக வுடையவர்; மலரினும் மெல்லிய மிருதுவான கைகள் வாய்க்கவர்; அத்தகைய திவ்விய கிலையினர் தமது அன்பன் வாய்மொழியை மன்பதை அறிந்து உய்யவேண்டும் என்னும் கருணையினல் தன் கையால் எழுதி யருளினர் என்னும் குறிப்பு இதில் கூர்ந்து உணரவுள்ளது. புகழ் நிலையை மருவி இனிய கலைச்சுவையோடு கனிந்து வந்துள்ள இந்தக் கவியைக் கருதிக் காண்பவர் அறிவின் சுவையை மாக் திப் பெரிதும்மகிழ்வர். ஒர்ந்துஉ னரும் அளவுஉ ணர்வுதெளிகிறது. புகழை எவரும் விரும்புவர்; எதையும் துறந்துபோன துற வியரும் புகழில் கசைகொண்டிருந்த உண்மையைச் சரிதங்கள் காட்டியுள்ளன. அதிசய வசியமாய் அது துதி கொண்டுள்ளது. யாவரும் ஆவலோடு புகழை அவாவி அலையினும் அதனை உரிமையாக நேரே அடைந்து கொள்பவர் மிகவும் அரியர். பெரிய நீர்மையோடு அரிய காரியங்களைச் செப்து முடிப் பவரையே புகழ் உரிமையாப் காடி அடைகிறது. அவ்வாறு செய்யாதவர் வேறு எவ்வாற்ருனும் அதனை அடைய முடியாது. எதேனும் ஒரளவு புகழ்பெற வேண்டும்; அங்கனம் பெரு தவர் பிறந்தும் பிறவாதவராய் இழிந்து ஒழிந்து போகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/261&oldid=1326819" இலிருந்து மீள்விக்கப்பட்டது