பக்கம்:தரும தீபிகை 5.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1801 புகழ் பெற்றவர் இவ்வுலகில் பிறந்த பயனைப் பெற்றவராய்ச் சிறந்து திகழ்கின்ருர்; மேலும் உயர்ந்த கதிகளை அடைந்து கொள்கின்ருர். அவரது பேரும் பேறும் நிவர்து நிலவுகின்றன. சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் அாற்றிதழ் அலரின் கிரைகண்டு அன்ன வேற்றுமை இல்லா விழுத்தினேப் பிறந்து வீற்றிருந் தோரை எண்ணுங் காலே 5 உரையும் பாட்டும் உடையோர் சிலரே; மரையிலே போல மாய்ந்திசினுேர் பலரே; புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான வூர்தி எய்துப என்பதம் செய்வினே முடித்துஎனக் 10 கேட்பல் எங்தை சேட்சென்னி கலங்கிள்ளி! தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து 15 வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் வருக்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லே யாகுமதி! அருளிலர் கொடாமை வல்லர் ஆகுக கெடாத துப்பினின் பகைஎதிர்ங் தோரே. (ւյմDւD, 27) புகழ்ப் பேற்றின் அருமை பெருமைகளை விளக்கி வந்துள்ள இந்தப் பாசுரம் கருதியுணரத் தக்கது. சோழ மன்னனை நோக்கி முதுகண்ணன் சாத்தனர் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் பாடியுள்ளார். குறித்த கருத்துகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. 'இவ்வுலகில் சிலரே மிகவும் அரிதாகப் புகழினைப் பெறு கின்ருர், புலவர் பாடும் படியான உயர்ந்த புகழை அடைந்தவர் தானகவே விரைந்து செல்லும் தெய்வ விமானத்தில் ஏறிப் பர கதிக்குப் போகின்ருர், அத்தகைய புகழை நீ அடைந்துகொள் ளவேண்டும்; அதனை அடையும் வழிகளுள் கொடையே தலைமை யானது; ஆதலால் உன்பால் வருந்தி வந்தவர்க்கு அன்பால் இரங்கி உதவுக, அந்த ஈகையால் உனக்குச் சிறந்த கீர்த்தியும், உயர்ந்த வெற்றியும், கிறைந்த மகிழ்ச்சியும் உளவாம்' எனப் 226

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/262&oldid=1326820" இலிருந்து மீள்விக்கப்பட்டது