பக்கம்:தரும தீபிகை 5.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1803 கிவருகின்றனர். அங்கனம் அடையாதவர் பிறவிப் பயனை இழந்து மடையராயிழிந்து கடையராக் கழிந்து ஒழிகின்றனர். அழியும் பொருள்கொடுத் தேசங்கமத்திற்கு அழிவில்பொருள் பழியும் பவமும் இலாதெய்த லாயும் பயனிலவாய்க் கழியும் படிநெடு நாள்நீத்து அமுதம் கமர்உகுத்தேற்கு ஒழியும் பவம் உள தோகர பீடத் துறைபவனே. (கிரஞ்சனமாலை) அழியும் பொருளைக் கொடுத்து அழியாக புகழை அடை யாமல் பழி படிந்திருந்தேனே, எனது பாவப்பிறவி ஒழியுமா? என்று கவி மறுகியிருக்கிருர். உயிர் ஊதியம் உணர வந்தது. புகழ் மருவிய பொழுது மனிதன் ஒளிமிகுந்த மணிபோல் உயர்ந்து திகழ்கிருன். இவ்வுலகில் இசைபெற்றவனே அவ்வுலகும் ஆசையோடு உவந்துகொள்கிறது. ஈசன் அருளும் அவனுக்கு இனிது வருகிறது. வரவே அவன் தேசுமிகுந்து தெய்வமாகிருன். சேரமான் சிறந்த கொடையாளி; அகனல் பெரும் புகழு டையனப் அவன் விளங்கி யிருந்தான். சிவபரம் பொருளும் அவனே உவந்து அருள்புரிந்து வந்தது. மதுரையில் எழுந்தருளி பிருக்க சோமசுக்கரப் பெருமான் அவனுடைய பெருமையை உலகம் அறிய வேண்டி ஒர் உபாயம் புரிந்தார். பாணபத்திரர் என்னும் புலவர் ஒருவர் வறுமையால் வருந்தியிருந்தார். பரமன் அவரது கனவில் தோன்றி 'நீ நாளை என்னிடம் வா! ஒலே ஒன்று கருகிறேன்; அதனைச் சேரனிடம் சேர்; பெருந்திருவாளனப்ச் சிறந்து வாழ்வ்ாப்” என்று மொழிந்தருளினர். புலவர் விழித் கார்; பரமன் கருணையை வியந்து விழிநீர் சொரிந்தார். விடிந்து எழுந்தார்; நீராடி நியமம் முடித்து நேரே கோவிலுக்கு வந்தார்; சுவாமி சங்கிதியுள் விரைந்து புகுந்து விழைந்து தொழுதார்; ஒலைச் சுருள் ஒன்று எதிரே விழுந்தது; அடங்கா மகிழ்ச்சியோடு அந்த முடங்கலை எடுத்தார்; கண்ணில் ஒற்றிக் கண்ணிர் மல்கி உள் ளம் உருகி வெளியே வந்தார். குறித்தபடியே சேர நாட்டை அடைந்து அரசனிடம் கொடுத்தார்; மன்னன் கண்டான்; உன்னி உருகினன்; அரியணையிலிருந்தபடியே விரைந்து எழுந்து திசை நோக்கித் தொழுதான்; கண்ணிர் மாலை மாலையாய் மார் பில் வழிந்து ஓடியது; புலவரது அடியில் விழுந்து கெடிது தொழு கான்; பின்பு வரிசை பல செய்து பொன்னும் மணியும் பொதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/264&oldid=1326822" இலிருந்து மீள்விக்கப்பட்டது