பக்கம்:தரும தீபிகை 5.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1808 த ரும தி பி கை குணத்தால் புகழை அடைந்தவர் பரதன் தருமன் முதலாயி னுேம். வேறு சில வழிகளாலும் புகழை அடையலாம் ஆயினும் அவற்றை இங்கே குறித்த இந்த நான்கனுள் அடக்கிக் கொள் ளலாம். வேர்களுக்கு இதமானசெயல்கள் சீர்மைகளாய்வத்தன. தேவாலயம் கட்டுதல்; அன்னசக்திரம் அமைத்தல், குளம் கிணறு முதலிய நீர் கிலைகளே ஆக்கல், நந்தவனம் வைத்தல், குளிர் பூஞ்சோலைகளை விளைக்கல் முதலியனவும் புகழை விளைத் துவரும். கருமமான கருமங்களுள் புகழ் மருமமா மருவியுளது. புகழ் பொன்ருது கிற்கும் என்றது அகன் கித்திய நிலைமையை உய்த்துணர வந்தது. பொன்றுதல் = அழிந்து மறைதல். உற்ற உடம்பு ஒழிந்து போனலும் ஒருவன் பெற்ற புகழ் அவனுடைய பேரைச் சீர்மையாக உலகில் நிலைநிறுத்திவருகிறது. புகழ் பெற்ற பேர்கள் ஒளிமிகப் பெற்று வழி வழியே மக்கள் தெளிவடைந்து உயர பாண்டும் ஒளிபுரிந்து வருகின்றனர். சீமூதன், ததீசி, சிபி, திலீபன், ரகு, ககு, களன், சகரன், விராடன், சந்தன், அந்திமான், காரி முதலிய சீராளரை கினைந்து மகிழ்ந்து பாராளர் என்றும் பயன் பெற்று வருகின்றனர். பொன்றும் உடல்கொடுத்துப் பொன்ருப் புகழ்படைத்தார் என்றும் உலகில் இருக்கின்ருர் - கின்ற சிபி மன்னன் சீமூதன் கன்னன் ததீசி புவி மன்னி யுள்ளார் பொலிந்து. அழியும் உடலை விடுத்து அழியாக புகழை அடைந்தவர் உலகம் கொழுது வாழ்த்த உயர்ந்து விளங்குகின்ருர். வான சோதிகள் போல் வயங்கி வையம் உப்ய அவர் வழி செய்து வருதலால் வழிமுறையே எவரும் அவரை வாழ்த்தி வருகின்ருர். மக்கள் இனம் தொடர்ந்து மகிமையோடு வழிபட்டு வரு கின்றமையால் புகழ்பெற்றவர் சாகா வரம்பெற்ற சிரஞ்சீவிக ளாய்ச் சிறந்து யாண்டும் என்றும் உயர்ந்து திகழ்கின்ருர். மண்ணின்மேல் வான் புகழ் கட்டானும், மாசில் சீர்ப் பெண்ணி னுட் கற்புடையாட் பெற்ருனும், ---உண்ணுர்ேக் கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய்தி ர்ை. . (திரிகடுகம், 16)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/269&oldid=1326828" இலிருந்து மீள்விக்கப்பட்டது