பக்கம்:தரும தீபிகை 5.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1807 யூகம் வாய்ந்தவர்; கொடை வீரங்களால் புகழ் அடைந்தாலும் அது புலவர் வாயால் பாடப்பெற்ற போதுதான் உயர்வடையும் என உணர்ந்து உறுதி நிலையை நாடினர். அக்காலத்தில் சிறந்த கவிஞராய் விளங்கியிருந்த வில்லிபுத்தாரோடு உறவு கெர்ண் டார்; தங்கள் இருவர் பெயரும் பொங்கிய புகழோடு பொலிந்து வரும் வழியைத் தெளிந்து வந்தார்; பாரதக் ககையைக் காவிய மாப் பாட வேண்டினர்; புலவரும் அவ்வாறே பாடியருளினர். எங்கும் இவன் இசைபரப்பி வருநாளில் = யாமுரைத்த இந்த நாட்டில் கொங்கர்குல வரபதியாட் கொண்டான் என்று ஒரு வண்மைக் குரிசில் தோன்றி வெங்கலியின் மூழ்காமல் கருநடப்பேர் வெள்ளத்து விழாமல் நான்காம் சங்கம் என முச்சங்கத் தண்டமிழ் அால் கலங்காமல் தலைகண் டானே. (1) தென்னுட்டில் வடநாட்டில் குடநாட்டில் குணநாட்டில் தெவ்வர் ஒடக் கன்னட்டி அமர்பொருது கங்கைநீர் ஊட்டுவித்துக் கண்டன் வேங்கை எங்காட்டும் எழுதியவன் திருமரபோர் பெற்றபுகழ் யாவர் பெற்ருர்? அங்காட்டுக் கொற்றம்எல்லாம் அக்குரிசில் புகழொடவ தரித்த தன்றே. (2) பிறந்துய்யக் கொண்டவனிப் பேருலகம் பெருவாழ்வு கூரு நாளில் கிறைந்தபுகழ்ச் சனி நகர்வாழ் வில்லிபுத்துர ரனே நோக்கி நீயும் நானும் பிறந்ததிசைக்கு இசைகிற்பப் பாரதமாம் பெருங்கதையைப் பெரியோர் தங்கள் சிறந்தசெவிக்கு அமுதமெனத் தமிழ்மொழியின் விருத்தத்தால் செய்க என்ருன். (பாரதம், பாயிரம்) கல்வியால் அவன் புகழ் நாடியிருக்கும் நிலையை இவை காட்டியுள்ளன. தாம் பிறந்த திசைக்கு இசை நிற்க உணர்ந்து' செய்து கொள்வதே சிறக்க மேலோர் கடமை என்பதை இங்கே தெளிந்து கொள்கிருேம். பெற்றபிற்விக்கு இசைபேருய்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/268&oldid=1326827" இலிருந்து மீள்விக்கப்பட்டது