பக்கம்:தரும தீபிகை 5.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1806 த ரும தீபிகை கின்றன. ஈகையால் எய்தும் புகழே வேறு எவற்றினும் மேலாப் வாகை பெற்று நிற்கும் என்பதை இவனது சீவியமும் காவிய மும் ஒவிய வுருவங்களாய் யாண்டும் உணர்த்தி நிற்கின்றன். உரைப்பார் உரைப்பவை எல் லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் கிற்கும் புகழ். (குறள், 232) எளியராய் வந்து இரப்பவர்க்கு அளிபுரிந்து ஈவார்மீதே புகழ் மேவி நிற்கும்; அதனையே உலகம் உவந்து பேசிவரும் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிருர், ஈகையில் ஒர் அதிசய இனிமை மருவியுள்ளது; ஆகவே யாவரும் அதனைப் பாராட்டி மகிழ்கின்றனர். கொடையாளியை உலகம் புகழ்ந்து பேசும், புலவர்களும் உவந்து பாடுவார்கள் என்ற கல்ை கொடைக்கும் புகழுக்கும் உள்ள உறவுரிமையை உணர்ந்துகொள்ளலாம். வெய்ய குரல்தோன்றி வெஞ்சினவே அறுட்கொளினும் பெய்யு மழைமுகிலப் பேணுவரால் --- வையத்து இருள்பொழியும் குற்றம் பல எனினும் யார்க்கும் பொருள்பொழிவார் மேற்றே புகழ். ' (தனிப்பாடல்) இடியும் மின்னலும் மருவியிருந்தாலும் மழை பொழியும் மேகத்தை யாவரும் போற்றி மகிழ்வர்; அதுபோல் கொடிய குற்றங்கள் பல கூடியிருக்காலும் பொருளே ஈவார்மீதே புகழ் எறிகிற்கும் எனக் கொடையின் மகிமையை இது குறித்துள்ளது. விரத்தாலும் புகழ் விளைந்து வருகிறது; அது அரிய திறலோடு அமைந்து விளைகிறது. இராமன் விசயன் முதலிய விரக் குரிசில் களின் கீர்த்திகள் விண்ணும் மண்ணும் விரிந்து கிற்கின்றன. - கல்வியின் புகழைத் திருவள்ளுவர் நக்கீரர் கம்பர் முதலான புலவர் திலகர்களிடம் பொலிந்து விளங்குவதை விழைந்துகண்டு மகிழ்ந்து வருகிருேம். காரணக் கொடையான் எனக் கம்பரைக் குறித்திருத்தலால் அவரது ஞான தானத்தையும் அதஞ்ல் விளைக் துள்ள மேன்மையான புகழையும்ான்குஉணர்ந்துகொள்கிருேம். அரிய நூலை இயற்றி அருளுவது பெரிய புகழை விளைத்து வருகிறது. வரபதி ஆட்கொண்டான் என்பவர் சோழ மன்ன னிடம் மந்திரியாயிருந்தவர். காரிய சாதனையிலும் ஆட்சி முறை யிலும் ஆற்றல் மிக்கவர்; அதிசய சாதுரியம் அமைந்தவர்; மதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/267&oldid=1326826" இலிருந்து மீள்விக்கப்பட்டது