பக்கம்:தரும தீபிகை 5.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. புகழ் 1805 ளுள் ஏதேனும் ஒன்றை உடையவரே புகழை அடைய நேர்கின் ருர்; யாதும் இல்லாகார் எதும் இலராப் இழிந்து போகின்ருர். அரிய புகழ் விளையும் பெரிய நிலைகள் இங்கே தெரிய வங் தன. காரண காரியங்கள் கருதி உணர உரியன. பிறர்க்கு உபகாரமாகப் பொருளைக் கொடுப்பது கொடை என வந்தது. சீவர்களுக்கு இகமாய் எவ்வழியும் ஒகை புரிந்து வருதலால் ஈகை உயர்க்க மகிமையா ஒளி மிகுந்துள்ளது. காம் வருக்தி ஈட்டிய பொருளை மெலிந்தவர்க்கு இரங்கி ஊட்ட உதவு வது உயர்ந்த பண்பாடு ஆகலால் உலகம் கொடையை உவந்து பாராட்டி வருகிறது. போற்றும் புகழ் கொடையால் நேரே தோற்றம் பெற்று வருகலின் அது இங்கே முதன்மையாய் கின்றது. தகுதியின் மிகுதிகளால் தலைமை வருகின்றது. விரம் முதலிய வற்றினும் கொடையை முக்தி வைத்தது புகழ் விளைவில் அதன் கிலைமை நீர்மைகளை நினைந்து தெளிய. உள் ளம் உவந்து கொடுப்பதால் உயர்க்கபுகழ் ஒளிமிகுந்துவருகிறது. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியது ஒர் யோசனேயோர் கேட்பர்; அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்ருேர் கொடுத்தார் எனப்படும் சொல். (நாலடியார், 100) o பேரிகை ஒசை காததாரம் கேட்கும், இடி முழக்கம் யோசனை எல்லை கேட்கும்; கொடையின் புகழ்மொழி மூன்று உலகங்களுக்கும் கேட்கும் என்னும் இது ஊன்றி உணரவுரியது. ஒரு கொடையாளியினுடைய இசை பூதலம், மீதலம்,பாதலம் முதலிய நில மண்டலங்கள் யாண்டும் பரவி நீண்டு நிலவும் என் றது அதனது கிலேயான நிலைமையும் தலைமையும் தெரிய வந்தது. கொடை வள்ளல் யாண்டும் உயர் நிலையில் ஒளி விசியுள்ளான். கன்னனுடைய கொடையின் புகழ் அன்று வையகமும் வானகமும் பரவி நின்றது. தேவராசனை இந்திரனும் அவனி டம் வந்து இரங்து வேண்டினன்; அவனது அதிசய நிலையைத் துதிசெய்து போயினன். அந்தக் கொடைக் குரிசில் இறந்து ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்து போயின; இன்றும் அவனுடைய கொடைவலியும், புகழ் கிலையும் எங்கும் ஒளிவீசி நின்ம கிலவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/266&oldid=1326825" இலிருந்து மீள்விக்கப்பட்டது