பக்கம்:தரும தீபிகை 5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்தேழாம் அதிகாரம். கொடுமை. அஃதாவது இனிய நீர்மையின்றிக் கொடியராய் நிற்பது. கெடிய துயரங்களே விளைத்து மனித வாழ்வைப் பாழ்படுத் தும் ஆகலால் அதனே ஒழித்து ஒழுக வேண்டும் என இது உணர்த்துகின்றது. உள்ளக் கரவுபோல் கொடுமை எள்ளித் தள்ளத்தக்கது. ஆகவே அதன் பின் இது வைக்கப்பட்டது. 6ே1. நெஞ்சில் இரக்கமின்றி சேக் கொடுமைகளை அஞ்சாமல் செய்யும் அழிகேடர்-நஞ்சம் உருவெடுத் துள்ளதுபோல் உள்ளார் அவரை அருவருத்து நீக்கல் அறம். (க) இ-ள் கெஞ்சில் இரக்மில்லாமல் நீசமான கொடுமைகளை அஞ் சாமல் செய்பவர் அழிகேடர் ஆகின்ருர், சஞ்சம் உருவு எடுத் துள்ளது போல் கருவெடுத்து நேரே அவர் பெருகி நிற்கின்ருர்; அவரை அருவருத்து நீக்குவது அறமாம் என்க. இது கொடுமையின் கேடுகளை உணர்த்துகின்றது. இனிய நீர்மை மனிதனைத் தெய்வம் ஆக்குகிறது; இரக்க மற்ற தன்மை அரக்களுக்கி அவலப் படுத்துகிறது. அருள் அன்பு இரக்கம் என்னும் பண்புகள் து வ்வுயிர்க்கும் இதமாய் இன்ப கலங்களை அருளி வருதலால் அவை திவ்விய மகிமைகள் தோய்ந்துள்ளன. தயவு காப்மையாய்க் கழைத்து வருகிறது. உள்ளத்தைப் பண்படுத்தி உயிர்களை உயர்ந்த கதிகளில் உய்த்தருளுகிற இந்த உத்தம இயல்புகளை இழந்தபொழுது மனி தன் இழிந்து ஈன நிலையில் கழித்து ஒழிகின்றன். இனிய பண்புகளை எய்தியிருக்கும் அளவு தெய்வீக இன் பங்களை எய்துகிருன்; இழந்துவிடின் வெப்ய து ய ர ங் க ள் வளர்ந்து வருகின்றன; வியாத அல்லல்கள் விரிந்து நிற்கின்றன. இரக்கம் என்பது உள்ளத்தின் உருக்கம் ஆதலால் அதனே உடையவன் ஒளிமிகுந்து உயர்ந்து போகிருன். எவ்வுயிர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/27&oldid=1326584" இலிருந்து மீள்விக்கப்பட்டது