பக்கம்:தரும தீபிகை 5.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொடுமை 1567 இரங்கி யருளுகிறவன் தன்னுயிர்க்குப் பெரிய இன்பச் சுரங் கத்தைச் செய்து கொள்ளுகிருன். ஆகவே அவன் அரிய ஒரு பாக்கியவானுய்ப் பெருமகிமை பெற்றுள்ளான். உண் ைம மருவிய உள்ளத்தில் இரக்கம் பெருக்கமாயுள்ளது. எல்லாருக் கும் இரங்கியருள வுரியவன் இறைவன் ஒருவனே. அவனது இரக்கத்தைப் பெறவேண்டுமாயின் மனிதனும் இரக்கமுள்ள வனுயிருக்கவேண்டும். - “Be merciful unto me, O Lord; for I cry unto thee daily.” - (Bible) :இறைவ! எனக்கு இரங்கியருள்; நாளும் உன்னே நோக்கி முறையிடுகிறேன்” என்னும் இது இங்கே அறியவுரியது. தேவ இரக்கம் சீவ இரக்கத்தின் உறவாயுள்ளது. ஒருவன் சிவர் களுக்கு இரங்கி வரின் அவனே நோக்கித் தேவ கருணை விரைந்து வருகிறது. உரிய தகுதி.அரிய உரிமையை அடைந்துகொள்கிறது. தெய்வ சம்பத்தாகிய இத்தகைய இரக்கத்தை இழந்து விடின் வெய்ய துன்பங்கள் பல விளைந்து கையவருத்தும். அருளை மறந்த மருளினலேகான் அல்லல்கள் எல்லாம் அ ட் ர் ந் து தொடர்ந்து யாண்டும் படர்ந்து வந்திருக்கின்றன. அன்பு கனிய இன்பம் கனிகிறது; அது மறையத் துன்பம் விளைகிறது. வினையின் விளைவு வியாது கின்று விளிவு செய்கிறது. நஞ்சம் உருவு எடுத்து உள்ளது போல் உள்ளார். என்றது பிறவுயிர்களுக்கு இடர்கள் இழைக்கும் படர்களை. கொடியவிடம் நெடிய வடிவங்கள்கொண்டு வந்ததுபோல் தீம்பர் உலகில் திரண்டு திரிகின்றனர். பாம்பு புலிகளினும் அத் தீம்பர் மிகவும் தீயவர் ஆதலால் அவரை அ ரு வ ரு க் து அயலே ஒதுங்கிப் போவது யாண்டும் நல்லது. கெடுப்பது ஒழி. . . (1) (P) பிறர்க்கு யாதொரு கேடும் செய்யாதே; அவ்வாறு கேடு செய்பவர் எவராயினும் அவரை அனுகாகே ன்ன ஒளவையார் இவ்வாறு அருளியுள்ளார். நன்மை செய்யவே இங்கப் பிறவி வந்துள்ளது; இதன் தன்மையை உணர்ந்து ககைமை புரிக. கெடுவது செய்யின் விடுவது கருமம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/28&oldid=1326585" இலிருந்து மீள்விக்கப்பட்டது