பக்கம்:தரும தீபிகை 5.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1810 த ரும தீபிகை திருவெண்ணெய் நல்லூரில் இருக்க சடையப்ப வள்ளலு GÓYLIL] புகழ் விண்ணும் மண்ணும் திசை எங்கும் பரவி நின்றது போல் நிலா ஒளிவிசி நின்றது என இது உரைத்துள்ளது. அரிய புகழை எய்தியவர் பெரிய சோதிகளாய்ப் பெருகி விளங்கு கின்றனர். அந்த ஒளியை அடைந்து நீ உயர்ந்து திகழ்க. 736 பெற்ருேர் உனக்கிட்ட பேரை உலகமெலாம் உற்ருேதி நிற்கும் உரிமைதான்-எற்ருல் ■ வருமென்னில் வந்தவர்க்கு மாருமல் ஈயும் பெருமையால் எய்தும் பெரிது. (சு) இ-ள் காப் கங்தையர் உனக்கு உரிமையாக இட்ட பெயரை உலகம் எல்லாம் பெருமையாக உவந்து பேசும்படியான மகிமை ஈகையில்ை உண்டாகிறது; ஆகையில்ை அந்த ஈதலைப் பேணி உன் அருமை உயிர்க்கு இனியஊதியத்தைக் கானுக என்பதாம். உற்ற தொடர்புகளில் மனிதனுக்குப் பற்று அதிகம். கன் லுடைய காய் கங்கை மனைவி மக்கள் முதலிய உரிமையாளர் எவரினும் கன் உயிரில் ஒருவனுக்குப் பிரியம் அதிகம். அவ்வு யிர்க்கு நிலையமாயுள்ள உடலை எவ்வழியும் செவ்வையாக இனிது பேணுகிருன். கன் பெயரைக் குறித்துப் பிறர் உயர்வாகப் பேசும்போது உவகையுறுகிருன். பத்திரிகை முதலிய எழுத்துக் களில் அதனைப் பார்க்க நேர்ந்தால் உள்ளம் உவந்துகொள்கிருன். தனக்கு உரிமையாய் அமைக்க பேரை உலகத்தில் கலைமை யாக நிலை நிறுத்துவதே புகழாம். அது அரிய செயல்களால் அமைகின்றது. சீவர்களுக்கு இதமாய் உதவி வருகிற உபகாரி பெயரையே எவரும் உயர்வாக உவந்து பேசி வருகின்றனர். கொண்டை மண்டலத்திலே கின்றை என்னும் ஊரிலே காளத்தியப்ப முதலியார் என்பவர் ஒருவர் இருந்தார். நல்ல கொடையாளி; அவருடைய செல்வம் ஊருணி நீர்போல் பலர்க் கும் உபகாரமாயிருந்தது. பொருளின் அளவு நிலையை யாதும் கருதாமல் எல்லை மீறி ஈந்து வங்கமையால் அவரது செல்வம் தேய நேர்ந்தது. வறுமை வரவே அவர் மிகவும் மறுகினர். கன்னே நாடி வருபவர்க்கு நன்கு உதவி செய்ய முடியவில்லையே! என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/271&oldid=1326830" இலிருந்து மீள்விக்கப்பட்டது