பக்கம்:தரும தீபிகை 5.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1811. உள்ளம் வருந்தியிருந்த அவர் ஒருநாள் மாலையில் அயலூருக்குச் சென்ருர், செல்லும் வழியில் இடையே ஒரு சத்திரத்தில் தங்கி .யிருந்தார். அங்கு முன்னதாகவே ஒரு புலவர் வந்து படுத்திருங் தார். பசியால் வருந்தியிருக்கமையால் நடுச்சாமம் ஆகியும் அவர் உறங்கவில்லை. கனக்கு நேர்ந்துள்ள வறுமையை நினைந்து உள் ளம் நொந்திருந்த அவர் அதனையே முன்னிலைப்படுத்தி ஒரு பாட்டுப் பாடினர். அந்தப் பாடல் அயலே வருகின்றது. - o # H = - + == m - 'நீளத் தொடர்ந்துவந்தாய் நீங்கா கிழல்போல நாசீளத் தொலைந்தொழிவாய் நல்குரவே-காளத்தி கின்றைக்கே சென்றக்கால் எேங்கே நான் எங்கே - இன்றைக்கே சற்றே இரு.” - 'ஏ கரித்திரமே! நீ என்னை நெடுங்காலம் நிழல்போல் தொடர்ந்து வந்துள்ளாய், நாளைத் தொலைந்துபோவாய், காளத்தி வள்ளலுடைய ஊருக்கு நாளை நான் போவேன்; என் கலி நீங் கிப்போம்; நான் பெரிய செல்வன் ஆகிவிடுவேன்; அதன் பின் என்னே நீ காண முடியாது; இன்றைக்கு மட்டும் கொஞ்சம் இருந்துபோ!' என்று புலவர் இப்படிப் பாடியிருக்கிரு.ர். காளத் திமுதலியாரைத் கேடியே அவர் அங்கு வந்திருத்தலால் இவ் வாற் பாட சேர்ந்தார். இதனைக் கேட்டதும் முதலியார் உள்ளம் உருகினர்; கண்ணிர் மல்கியது. கன்னேக் காண விரும்பித் தன் ஊருக்குப் புலவர் நாளைக்குப் போவார் என்று தெரிந்ததும் விடியு முன்னரே விரைந்து எழுந்து விட்டுக்கு வந்து சேர்ந்தார். அரிதின் முயன்று சமையல் செய்துவைத்தார்; புலவர் வந்தார்; அவரை உவந்து உபசரித்து விருந்து புரிந்தார். கையில் கொடுத் தற்குப் பொருளில்லையே என்று வருந்தினர். ஈதல் இயையா வழி உளதாம் கோதல் சாதலினும் கொடிது என்பதை அனு பவத்தில் கண்டார். மன வேதனையோடு கொல்லைப்புறத்திற்குப் போனர். அங்கே இருந்த பாம்பின் புற்றில் தன் கையை விடுத் தார்; யாதொரு அபாயமும் சேரவில்லை; மீண்டு எடுத்தார்; ஒளி மிகுந்த மணி ஒன்று கையில் இருந்தது. தெய்வம் தந்தது என்று மகிழ்ந்தார். அதிசயமான அந்த நாகரத்தினத்தைப் புலவரிடம் கொடுத்துப் போற்றி விடுத்தார். இவருடைய மன நிலையையும் கொடை இயல்பையும் உலகம் உவந்து கொண்டாடியது.அரிய செயலால் இவர் பெயர் பெரிய புகழோடு இன்றும் நிலவி யுள்ளது. இசை பெற்றவர் என்றும் இனியராய்த் திகழ்கின்ார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/272&oldid=1326831" இலிருந்து மீள்விக்கப்பட்டது