பக்கம்:தரும தீபிகை 5.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1812 த ரும தீ பி. கை சிறந்த குணநலங்களோடு உயர்ந்த கொடையும் நன்கு அமைந்த பொழுது அந்த மனிதனை உவந்து புகழ் வந்து அடைகிறது. கோடன் என்பவன் செல்வ வளங்கள் நிறைந்த ஒரு சிற்றரசன். யாவரிடமும் போருளுடையனுய் ஆதரவு புரிந்து வந்தான். கல்வி யறிவிலும் வீரத்திலும் ஈகையிலும் சிறந்து நல்ல இசை பெற் றிருந்தான் ஆதலால் நல்லியக் கோடன் என நாடு புகழ்ந்து பேசப் பீடு மிகுந்து கின்ருன். பாடலிலும் துலங்கினன். 'அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும் ஆண்ணி புகுதலும் அழிபடை தாங்கலும் வாண்மீக் கூற்றத்து வயவர் ஏத்தக் கருதியது முடித்தலும் காமுறப் படுதலும் ஒருவழிப் படாமையும் ஒடியது உணர்தலும் அறிவுமடம் படுதலும் அறிவுகன் குடைமையும் வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்தப் பன்மீன் நடுவண் பால்மதி போல இன்னகை ஆயமோடு இருந்தோன் குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் செல் இசை நிலைஇய பண்பின் கல்லியக் கோடன்' +. (சிறுபாண்) இதல்ை இவனுடைய பண்பாடுகளை நன்கு அறிந்துகொள் கிருேம். கல்லூர் நத்தத்தனர் என்னும் சங்கப் புலவர் இவனது நிலைமை தலைமைகளை வியந்து கலையின் சுவைக்ள் கனிய ஒரு ஆால் பாடியிருக்கிருர், உபகாரியின் பெயரை உலகம் உவந்து கூறும் என்பதை இவன் பேர் எங்கும் நன்கு விளக்கி கின்றது. நல்லது செய்; புகழ் உன்னே நாடிவரும். - 787 பிள்ளைப்பேறின்றேல் பிழைசொல்வர் அன்னதினும் வள்ளற் புகழை மருவாரே -எள்ளற்பா டெல்லாம் அடைந்திங் கிழிவார் அவர்தோற்றம் பொல்லாத தாகும் புவிக்கு. (எ) - இ-ள் பிள்ளைப் பேறு இல்லாதவரைப் பிழை சொல்லுவர்; அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/273&oldid=1326832" இலிருந்து மீள்விக்கப்பட்டது