பக்கம்:தரும தீபிகை 5.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க | 1813 ஒரு பிழையாகாது; புகழைப் பெருமையே மனிதனுக்குப் பெரிய பிழையாம்; அப்பிழையுடைய பழியாளன் இருப்பது பூமிக்குப் பாரமாம்; அவ்வாருகாமல் புகழை ஆக்கிக் கொள்ளுக. பிறந்த மக்கள் பெறவுரிய பேறுகள் பல. அறம் பொருள் இன்பம் விடுகளை அடைய வந்துள்ள மனிதன் இடையே கடை யாப் இழிந்து படலாகாது. அடைய வேண்டியவைகளை அடை யவுரிய தகுதிகளை யுடையவனப் உயர்ந்து வர வேண்டும். கன் பிறப்பு நல்ல பயன் உற ஒழுகி வருபவன் விழுமிய மேன்மக னப் விளங்கி வருகிருன். அவ்வரவு அதிசயநிலையை அருளுகிறது. இனிய புகழை அடைந்துகொள்வதே அரிய பிறவியின் பெரிய பயனும். உரிமையான அதனை அடையவில்லையாளுல் அது சிறுமையாய்ப் பழி அடைந்ததாம். பிறவிப் பேற்றைப் பெருதவன் பேராக ஒர் பேறிழந்தவனப்ச் சீரழிந்தான். வசைஎன்ப வையத்தார்க் கெல்லாம் இசைஎன்னும் எச்சம் பெருஅ விடின். (குறள், 238) புகழ் ஆகிய மகவை ஒருவன் பெறவில்லையானல் அது அவனுக்குக் கொடிய பழியாம் என இது முடிவு செய்துள்ளது. இசை = புகழ். வசை= பழி. எச்சம் = சங்கதி. ஒருவன் இறந்து போனலும் அவன் பின் எஞ்சி நிற்பது எச்சம் என வந்தது. இந்த நிலையில் சங்கதியும் எச்சம் என நேர்ந்தது. உச்சமான எச்சம் உயர்ந்த கீர்த்தியே. " எச்சம் இன்மையின் எவ்வம் கூராத் * துப்புரவு எல்லாம் துறப்பேன்." (பெருங்கதை, 2, 11.) மகவை எச்சம் என்று இது குறித்து வந்துள்ளது. தான் இறந்து போனல் தன் பேரைச் சொல்லவும், தனது குடியை விளக்கவும் ஒரு பிள்ளை வேண்டும் என்று எங்க மனித லும் ஆவலோடு சிந்தனை செய்துள்ளான். புத்திரன் இல்லையேல் அது ஒரு பெரிய பழியாக எண்ணப்பட்டுள்ளது. அறிவறிக்க மக்கட்பேறு பெறுமவற்றுள் எல்லாம் உயர்ந்த பேறு எனத் தேவரும் குறித்துள்ளார். இத்தகைய மகவினும் புகழ் உயர்நிலை யுடையது. உத்தமமானது; கித்தியமாய் நிலவி கிம்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/274&oldid=1326833" இலிருந்து மீள்விக்கப்பட்டது