பக்கம்:தரும தீபிகை 5.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1814 த ரும தீ பி. கை மகப்பேறு இல்லாதவன் மலடன் என கின்ருன். புகழ்ப்பேறு இல்லாதவன் பழிகாரன் என இழிந்தான். முன்னதினும் பின்னது மிகவும் இழிவுடையது. நல்ல புக ழைப் பெற்றவன் எல்லா மகிமைகளையும் ஒருங்கே பெற்ருன். பிள்ளைகளைப் பெற்றவர் பலர் அல்லலும் அவலமுமே அடைந்து யாண்டும் வருக்தி நீண்ட துயரோடு நெஞ்சுகொந்துகிற்கின்ருர். கொள்ளிக்குப் பிள்ளை எனக் கொண்டாடிப் பேணியவன் துள்ளித்திங் கூக்கத் தொலைகின்ருர் --- தெள்ளுபுகழ் பெற்ருர் இருமையும் சீர் பேற்றுப் பெருமகிழ்ச்சி உற்ருர் கிலேயா யுயர்ந்து. * பிள்ளைப் பேற்றிற்கும் புகழ்ப் பேற்றிற்கும் உள்ள வேற் அறுமையை இது உணர்த்தியுள்ளது. கான் இறந்தால் கனக்குக் கொள்ளிவைத்து எள்ளும் கண்ணிரும் இறைக்கவேண்டும் என்று ஒருவன் உள்ளிப் பெறுகின்ருன்; அப்படிப்பெற்றபிள்ளை அந்தக் குடிக்கே கொடுமையாக் கொள்ளி வைத்து விடுகிறது. 'இந்தச் சண்டாளன் பிறந்தானே; என் குடிக்கு இழிவு நேர்ந்ததே, நான் செய்த பாவம் இக்க உருவில் இப்படித் திரண் டுவந்துள்ளது” என்று தங்தையர் சிங்கை நொந்து வருந்த மைக் தர்கள் பிறந்துள்ளனர். அப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்றவ ரினும் பெருகவரே எங்கும் கல்ல சுக சீவிகளாயிருக்கின்றனர். " கோட்டானே! நாயே! குரங்கே! உனே ஒருத்தி போட்டாளே வேலையற்றுப் போய். ஒரு ஈன மகனேப் பார்த்து இப்பாட்டு இப்படி வெறுத்து வந்து ளது. இவ்வாறு எள்ளிஇகழப்பெறுவதினும் பெருமையேநல்லது. இல்லற வாழ்க்கைக்குப் பிள்ளைப்பேறு பெருமையே ஆயி லும் அது நல்லதாக அமையவில்லையானல் கொடிய அல்லலே. பொல்லாத பிள்ளைகள் யாண்டும் புலைத் துயரங்களேயாம். வசையான கொச்சை மக்களைப் பெறுவதினும் இசையான எச்சம் பெற்றவனே உச்ச நிலையில் உயர்ந்து உய்தி பெறுகின் முன். புகழே உயிர்க்கு ஊதியமான உத்தம புத்திரளும். - அறிவறிந்த மக்கள் (குறள், 61) எனப் பிள்ளைப் பேற்றின் கிலைமையைத் தலைமையாக விசேடித்து விளக்கியருளிய வள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/275&oldid=1326834" இலிருந்து மீள்விக்கப்பட்டது