பக்கம்:தரும தீபிகை 5.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1815 வப் பெருந்தகை அத்தகைய பிள்ளைகளைப் பெறவில்லை. இசை என்னும் எச்சம் ஒன்றே பெற்ருர். அதனல் வையமெல்லாம் புகழ்ந்து போற்ற உச்ச நிலையில் உயர்ந்து ஒளி விசியுள்ளார். இசையிற் பெரியதுஓர் எச்சம் இல்லை.(முதுமொழிக்காஞ்சி) புகழினும் உயர்வான சங்கதி யாதும் யாண்டும் இல்லை எனக் கூடலூர் கிழார் இவ்வாறு ஆராய்ந்து கூறியிருக்கிரு.ர். 'இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரவல்லது புகழே; அதனைத் தனி உரிமையாக மனிதன் ஈட்டிக்கொள்ள வேண்டும் அங்ங்னம் கொள்ளவில்லையானல் அவன் எள்ளலடைந்து இழி கின்ருன். நல்லபிறவிப்பயன்இல்லாமையால்பொல்லாமை ஆயது. அவர் தோற்றம் புவிக்குப் போல்லாத தாகும். என்றது புகழ்பெருத அந்த மாக்களைப் பூவிகேவி உள்ளம் கடுத்து வெறுத்திருப்பாள் என்பதாம். உயிரின் பயனிழந்து பாழ்பட்டுள்ளமையால் கன்பால் அவர் தங்கிருப்பது புவிக்குப் புண்பாடாயது. வசையுடையான் உறின் வையம் வரவு குன்றும். வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். (குறள், 239) புகழ் இல்லாக பழியாளர் தங்கியுள்ள நாட்டில் விளையுள் குன்றும் என இது குறித்துள்ளது. நெல் புல் முதலிய உணவுப் பொருள்கள் நன்கு விளையா என்ற கல்ை பழியருடைய அழி துயரும் இழி நிலையும் பாவத் தொடர்பும் நேரே தெரிய வந்தன. வசை படிந்து வறிதே அழிந்துபோகாதே; இசை புரிந்து உயர்ந்துகொள்க. அது எங்கும் மகிமையாய் இன்பம் தரும். 738 வந்து பிறந்தாய் வசைஒழிய வாழ்ந்துே முந்தி இசையை முடித்துயர்க-பிந்தினேயேல் யாரும் இகழ அடுசமன்கைப் பட்டிழிந்து சீரழிய நேரும் தெளி. (அ) 摯 இ-ள். H சிறக்க மனிதனுப்ப் பிறந்துள்ள நீ இழிக்க வசைகள் சேரா மல் இனிது ஒழுகி உயர்ந்த இசையை விரைந்து அடைந்துகொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/276&oldid=1326835" இலிருந்து மீள்விக்கப்பட்டது