பக்கம்:தரும தீபிகை 5.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1816 த ரும தீ பி. கை ளுக; அவ்வாறு கொள்ளாயேல் எள்ளலாப் இழிந்து எமன் கைப்பட்டு அல்லலுழந்து அழிந்து ஒழிவாய்; இதனை உணர்ந்து தெளிந்து உரிய கலனே உறுதியாகப் பெறுக என்பதாம். வந்து பிறந்தாய்! என்றது அளவிடலரிய பல இழி பிறவி களைக் கடந்து உயர் நிலையில் கோன்றியுள்ள அருமையை ஊன்றி உணர வந்தது. வரவின் அருமை தெரிந்தவன் பிறவியின் பயனே விரைவில் கொள்ள நேர்கின்ருன். நேரவே சீராளன் ஆகின்ருன். உலகில் மனிதன் என வந்தவன் வளர்ந்து வாழ்ந்து சில காலம் இருந்துவிட்டுப் பின்பு மறைந்து போகின்ருன். கிலத்தில் தோன்றிய மனிதன் நீர் மேல் கோன்றிய குமிழிபோல் விரைந்து மறைந்து போதலால் மாயவாழ்வு, பொப் வாழ்வு எனக் காய வாழ்வு கடைப்பட்டு கின்றது. இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் இன்னபடி இவ்வுடலை விட்டு உயிர் நீங்கி விடும் என யாரும் வரைந்து கூற முடியாது. மணமகளுப் மகிழ்ந்திருந்தவன் பின மகளுப்ப் பிறழ்ந்து விழ்க் தான் என்று பேசப்படுகின்றது. அழிகின்ற அவல நிலையில் உயிர்வாழ்வு ஊசலாடியுள்ளமையால் விழுமியதையுறவேண்டும். | நிலையில்லாத இந்த வாழ்வில் கிலேயுடையதை அடைந்து கொள்வது கலையாய கடமையாய்ச் சார்ந்து கின்றது. எடுத்த வுடல் இறக்து போனுலும் அடுத்து கின்று விளங்கி வருவது புகழே ஆதலால் அது பிறவிப்பயன் எனப் பெருமையாகப் பேச வந்தது. பொன்றுமுன்பொன்ரு கதை யுறுவது என்றும் இனிதாம். ஒன்ரு வுலகத்து உயர்ந்த புகழல்லால் பொன் ருது கிற்பது ஒன் றில். (குறள், 238) யாவும் பொன்றி ஒழியும் இவ்வுலகில் என்றும் பொன்ரு மல் நிலைத்து நிற்பது புகழே; அதனை மனிதன் விரைந்து அடைக் துகொள்ளவேண்டும் எனத் தேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். நிலையில்லாத உலகத்தில் நிலையுடையதைப் பெறுவது கலைமை யான ஆண்மையாம். அங்கனம் பெற்றவன் வெற்றிவிசனுகிருன். பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின் பற்றின்கண் கில்லாது அறம்செய்க -- மற்றது பொன்ருப் புகழ்கிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்காடிக் கன் அடைத் தாய்போல் வரும். (அறகேறிச்சாரம், 60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/277&oldid=1326836" இலிருந்து மீள்விக்கப்பட்டது