பக்கம்:தரும தீபிகை 5.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1817 நல்ல கருமங்களை நன்கு நாடிச்செய்; அதனல் புகழும் கருமமும் உளவாம்; இருமையும் பெருமையாம்; நிலையான கீர்த்தியால் இவ்வுலகம் உன்னைப் போற்றிவரும்; எடுத்த உடலை விடுத்து நீ இறந்து போப் எந்த ஊரில் பிறந்திருந்தாலும் கன்றைத்தேடித் தாய்ப்பசு வருதல்போல் செய்த கருமம் உன்னை காடி வந்து இன்பம் ஊட்டி யாண்டும் இகம்புரியும் என இது காட்டியுளது. எண்ணம் இனிதாப் மனிதன் நல்லது செய்ய நேர்ந்தால் புகழும் புண்ணியமும் அவனே அடைய நேர்கின்றன. கல்வினை யாளன் கீர்த்திமானப் வருகலால் அவன் என்றும் கித்திய சீவ னப் நிலைத்து உத்கம நிலையில் உயர்ந்து வாழ்ந்தவனகிருன். Depart from evil, and do good; and dwell for evermore. (Bible) 'தி மையை விட்டு விலகி நன்மை செய்; என்றென்றும் நீ நிலைத்திருப்பாப்' என்னும் இது இங்கே அறியவுரியது. இத மான இனிய காரியங்களைச் செய்த பொழுதே மனிதன் நிலை யான வாழ்வை நேரே அடைந்து கலைமையாய் நிலவுகின்ருன். பிற உயிர்களுக்கு இரங்கி இகம் புரியும் உபகார நிலையில் உயர்வான புகழும் புண்ணியங்களும் உளவாகின்றன. ஆகவே அந்த உபகாரி இம்மையும் மறுமையும் உரிமையா இன்பம் பெறு கிருன். வையமும் வானமும் அவனை உவந்து வாழ்த்தி வரு கின் றன. மன்னுயிர் ஒம்பினவன் பொன்னுயிராப் ஓங்கி உயர்கிருன். - ஒரு பறவையைக் காப்பதற்காகத் தன் உடலில் இருந்து சி பி மன்னன் சதையை அறுத்துக் கொடுத்தான்; முடிவில் உயி ரையும் விடத் துணிந்தான். அவனுடைய மன வுறுதியும் கொடை நிலையும், குண நலமும் அதிசயங்களாய்த் துதிசெய்ய நின்றன. ஓடிவந்து தன்பால் ஒதுங்கிகின்ற ஒண்புறவை நாடி இரங்கி நயந்தருளிப் ---பிடுடைய தன்னுடம்பும் கொய்துடனே தந்தான் சிபிமன்னன் மன்னுடிகழ் கொண்டான் மகிழ்ந்து. சிபியின் செயலும் அகனல் அடைந்துள்ள புகழும் இதல்ை அறிந்துகொள்கிருேம். இம்மன்னன் இராமனுக்குப் பல கலை முறைகளுக்கு முன்பு இருந்தவன். இவன் பிறந்த குடி வழியில் தான் பிறந்து வந்துள்ளது சிறந்த பெருமை ப் ஒT அவ் விர வள்ளல் பல முறையும் இவனே உவந்து பாராட்டி யிருக்கிருன், 228

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/278&oldid=1326837" இலிருந்து மீள்விக்கப்பட்டது