பக்கம்:தரும தீபிகை 5.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1818 த ரு ம தீ பி. கை

  • பிறந்தகாள் தொடங்கி யாரும் துலேபுக்க பெரியோன்பெற்றி மறந்த நாள் உண்டோ? ' (இராமா வீடணன், 110) இராமன் இவ்வாறு சிபியை மனம் உருகிப் புகழ்ந்திருக்கிருன். "புறவுஒன்றின்பொருட்டாகக் துலேபுக்கபெருக்ககை கன் புகழில் பூத்த அறன் ஒன்று திருமணத்தான். ' (இராமா, கிரு.அவதாரம், 65) கிபியினுடைய புகழ் ஒளியில் பூத்த புண்ணியவான் எனக் தசரதனக் குறித்து உரோமபதன் என்னும் அரசன் கலைக் கோட்டு முனிவரிடம் இவ்வாறு கூறியிருக்கிருன். சிறிய பற வைக்காகத் தனது அரிய உயிரை உதவ நேர்க்கது பெரிய அதி சயம் ஆகலால் சிபி மன்னனுடைய புகழ் புவி எங்கும் பரந்து சீவர்களின் செவி குளிர வளர்ந்து கேசு மிகுந்துள்ளது.

புகழ் எதல்ை வரும்? அதனை அடைய வல்லவர் யார்? என் பதை ஒரளவு ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். தன்பேரை இக் நிலவுலகில் நிலைநிறுத்திச் சீரும் சிறப்பும் பெருகி வரத் தலைமை யான இன்பத்தைப் புகழாளர் பொருந்தி நிற்கின்ருர். மன்னுயிர்க்கு உதவி செய்; அது உன் உயிர்க்குப் புகழாம். 739 பாரி குமணன் படைஅதிகன் நள்ளிஆய் ஓரி எழினி உயர்பேகன்- காரிகன்னன் என்றிருந்தார் அன்றிறந்தார் இன்றும் எதனுலே கின்றுயர்ந் துள்ளார் கினை. . (கூ) 'இ-ள் பாரி முதலிய வள்ளல்கள் பண்டே இறந்துபோயினர்; இறந்தும் இன்றும் அவர் எங்கும் விளங்கி வருகின்றனர்; எத ல்ை இவ்வாறு அவர் நின்று நிலவுகின்ருர்? புகழாலேயாம்; இதனை உணர்ந்து அதனை நீ விழைந்து பெறுக என்பதாம். உயர்ந்த கருமங்களையும் சிறந்த கருமங்களையும் செய்தவர் பெரிய புகழாளர்களாய் விளங்கி நிற்கின்றனர். நாட்டில் நல்ல கீர்த்தியாளர் தோன்றின் அங்கத் தேசத்திலுள்ள கவிஞர்கள் அவரை உவந்து பாடுகின்றனர். அவ்வாறு புலவர் வாய்மொழி களால் ஒளியும் உருவமும் பெற்றுள்ள விழுமியோரை உலகம் வழிமுறையே தொடர்ந்து விழைந்த போற்றி வருகிறது. அங்க னம் வங்க மேலோருள் சிலரை இங்கே காண வந்துள்ளோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/279&oldid=1326838" இலிருந்து மீள்விக்கப்பட்டது