பக்கம்:தரும தீபிகை 5.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1819 『 பாரி இவன் பாண்டி நாட்டினன். கு.அறு நில மன்னன். முந்நூஅறு ஊர்களையுடைய பறம்பு நாடு இவனுக்கு வரம்பாயிருக்கது. இவ லுடைய உறுதியும் ஊக்கமும் பொறுதியும் அதிசய நிலையின. நிறைந்த கல்விமான்: சிறந்த கொடையாளி. மழை பொழியும் மாரி, பொருள் பொழியும் பாரி என உலகம் புகழ்ந்துவர உயர்ந்து வந்தான். இவனது வாழ்வு புகழ்மணம் தோய்ந்து வந்தது. பாரிநீ மாரி எனப் பாருலகம் பாராட்டச் சிரியய்ை கின்ற திறமெல்லாம்-- வாரி வழங்கிவந்த அந்தவுயர் வண்மையில்ை வந்து முழங்கிய சீராம் முதிர்ந்து. உரிமையோடு நேரே பெய்யும் மழை என்று வையம் மகிழ்த்துவரப் பாரி வாழ்ந்து வந்துள்ளதை இதல்ை ஒர்ந்து உணர்ந்துகொள்கிருேம். கைம்மாறு கருதாமல் மழை பொழி வதுபோல் எவர்க்கும் இனிபகுப் உதவியுள்ளமையால் இவனது விழுமிய நீர்மையை உலகம் வியந்து விழைந்து பேச நேர்ந்தது. 'நீரினும் இனிய சாயல், பாளி வேள்” (புறம், 105) எனக் கூறியிருப்பதும் கூர்ந்து சிந்திக்க வுரியது. பெரு நீர்மையுடைய இவன் ஒருநாள் கேர் ஏறிக் கானகம் போனன். அங்கே ஒரு முல்லைக்கொடி கொழுங்கோடிப் படர்ந்து நெடிது அசைந்து கொண்டிருந்தது; அதனை இவன் கண்டான்; யாதொரு ஆதரவு மின்றித் தளர்ந்து அலமந்துள்ளகே என்று இரங்கினன்; தான் எறிப்போயிருந்த கேரை அதன் அருகே கொண்டுபோய் நிறுத்தி வளைந்து கிடந்த கொடியைத் தன் கையால் எடுத்துத் தேர்மேல் படர்ந்து வளரும்படி விடுத்தான்; தனியே நடந்து வந்தான். இது எவ்வளவு கண்ணுேட்டம்! எத்துணைத் தண்ணளி: இந்த அரிய செயல் பெரிய மகிமையாய்ப் பாராட்ட வந்தது. பூத்தலே அரு.அப் புனேகொடி முல்லை காத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த i பரந்து.ஒங்கு சிறப்பிற் பாரி. ' (புறம், 200) நறுவி உறைக்கும் நாக நெடுவழிச் சிறுவி முல்லேக்குப் பெருங்தேர் கல்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/280&oldid=1326839" இலிருந்து மீள்விக்கப்பட்டது