பக்கம்:தரும தீபிகை 5.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1820 த ரும தீ பி. கை பிறங்குவெள் அருவி விழும் சாரல் பறம்பிற் கோமான் பாரி. ' (சிறுபாண்) புலர்ந்த சாந்திற் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி.' (பதிற்றுப்பத்து 61) " ஏந்துகோட்டு யானே வேந்தர் ஒட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி. ” (அகம், 78) இன்னவாறு 'சங்க நூல் எ ங்கனும் பாரி புகழ் பாராட்டப் பட்டுள்ளது. அருளிய கொடை அதிசய கீர்த்தியாயது. ' கொடுக்கிலாதானேப் பாரியே.என்று கூறினும் கொடுப்பார் இலை. ' (தேவாரம்) சுந்தர மூர்த்தி சுவாமிகளும் பாரியின் கொடையைக் குறித்து இங்கனம் கூறியிருக்கிரு.ர். ஆகவே இவனது சீர்மையும் நீர்மையும் தெரியலாகும். கொடி செடிகளுக்கும் இரங்கி உதவி யது அதிசய வண்மையாய் உயர்த்து துதி செய்ய நின்றது. ஊர்ந்துசென்ற மணித்தேரை ஒருமுல்லேக் கொடிக்குதவி உவந்து மீண்டு சார்ந்துவழி நடந்துவந்தான் தண்பாரி முன்னுளில் இங்காள் இங்கே ஆர்ந்தவுற வினனேனும் அடுத்துவந்து தம்காரில் அமர்ந்திருக்க நேர்ந்துவிட மாட்டாத நெடுகிலேயர் - படுகிலேயில் கிமிர்ந்துள் ளாரே. (இந்தியத்தாய் கிலே) அழகிய தனது அருமைத் தேரை ஒரு முல்லைக் கொடிக்கு உரிமையாக உதவிவிட்டுக் கால் நடையாய் மீண்டு பண்டு பாரி வங்கான்; அத்தகைய உபகாரி பிறந்திருந்த நாட்டிலே இன்று தமது காரில் உறவினனும் சிறிது போது அமர்ந்திருக்கச் சம்ம தியாக வெம்மதியாளர் பெருகியுள்ளனரே! என்று இது மறுகி யுள்ளது. பழைய நிலையும் புதிய புலையும் விழிதெரிய வந்தன. குமணன். இவன் உள்ளம் கனிந்த வள்ளல். உயர் குணங்கள் பல இயல்பாக அமைந்தவன். மலர் மனத்தை நுகர்ந்து வண்டுகள் மகிழ்தல்போல் இவனது குணநலத்தை உணர்க்க பலரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/281&oldid=1326840" இலிருந்து மீள்விக்கப்பட்டது