பக்கம்:தரும தீபிகை 5.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1821 புகழ்ந்து வந்தனர். இவனது புகழ் மணம் பூமி எங்கும் பரவி கின்றது ஆகலால் குமணன் என்னும் பேர் காரணக் குறியாய் அமைந்தது. கு = பூமி. மணன் = புகழாகிய மனத்தைப் புவி எங்கும் பரப்பி மனிதரின் செவிக்கு இனிய சுவை செய்தவன். புவியினில் புகழ்மணம் பொலிந்து கின்றதால் செவியினில் குமணன்பேர் சிறந்து கின்றது. ” என்றகளுல் இவனது சீர்த்தி நிலையை நன்கு அறியலாகும். எவர்க்கும் இல்லை என்னுமல் இனிது ஈந்து வந்த இக்க நல்லவனுக்குப் பொல்லாத ஒரு கம்பி இருக்கான். அவன் பெயர் அமணன். பேராசை யுடையவன்; அரசை வலிந்து கவர்ந்து கொண்டு அண்ணனே வெளியே துரத்திவிட்டான், இவன் தனியே ஒரு பூஞ்சோலையில் ஒதுங்கித் துறவிபோல் வாழ்ந்து வங்கான். ஒரு நாள் அங்கே சாத்தனர் என்னும் புலவர் வந்தார்; அவரைக் கண்டதும் இவன் மகிழ்ச்சி மீக்கொண்டான். நல்ல கல்விமான் ஆதலால் அவரோடு அளவளாவி உணர்வின் சுவை களை நுகர்ந்து உள்ளம் உவந்தான்; அவருக்கு ஏதேனும் கொடுக் துவிட வேண்டும் என்று கருதினன்; கையில் யாதும் இல்லை; நோகல் உழக்கான்; தன் தலையைக் கொப்துகொண்டு வரு வார்க்குக் கோடி பொன் கருவதாக அமணன் கூறியிருக்கான் ஆதலால் அதனை நினைந்தார்; அகம் மகிழ்ந்தார்; அயலே கிடந்த வாளை எடுத்துப் புலவர் கையில் கொடுத்துத் தன் தலையை வளைத் த நீட்டி இதனைக் கொப்துகொண்டு போப் என் கம்பி கைக் கொடுத்தால் உமக்குச் செம்பெர்ன் கோடி கொடுப்பான்' என்ருன். இவ்வுரையைக் கேட்டதும் புலவர் உள்ளம் உருகினர்; கண்ணிர் வெள்ளம் பெருகியது; விரைந்து அமணனிடம் போப் அவனுக்கு அறிவு போதித்தார்; அவன் ஒடிவங்து அண்ணன் காலில் விழுந்து கொழுது அழுதான். இருவரையும் உறவுசெய்து குமணனை அழைத்துப் போப் அரசனுக்கி வைத்துப் புலவர் உவகையோடு போயினர். அவர் செயல் உயர்நலனே அருளியது. வெம்பும் கால வெதும்பி விழும்பிரம் செம்பொன் கோடி விலைஎனச் சிந்தித்தான் உம்பர் கர்டும் உலகினும் தேடினும் எம்பிபோல் எமக்கு யாவர் உரியரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/282&oldid=1326841" இலிருந்து மீள்விக்கப்பட்டது