பக்கம்:தரும தீபிகை 5.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1822 த ரு ம தி பி கை தன்னைக் கொலை புரிய சேர்ந்த கொடிய அமணனைக் குறித்துக் குமணன் பாடிய இந்தப் பாடலே அவனே உள்ளத்தை உருக்கி உறவுறச்செய்தது. கன் கையில் யாகொரு பொருளும் இல்லாத போதும் தன் கலையைக் கொப்து கொடுக்க நேர்ந்த இவனது கொடையையும் மன நிலையையும் உலகம் அன்று உவந்து புகழ்ந் தது. மனித சமுகாயம் இன்றும் இவனே வியந்து கொண்டாடி வருகிறது. தலைக் கொடையான் என நிலைத்த புகழோடு நிலவி கிற்கின்ருன். அதிசய சீர்த்தி துதி செய்ய வந்தது. அதிகன். இவன் சிறிய அரசன், பெரிய வள்ளல்; நல்ல மதிமான்; சிறந்த போர்வீரன். இவனுடைய நாட்டிலிருந்த ஒரு மலைச் சாரலில் அரிய நெல்லி மரம் ஒன்றிருக்கது. அதன் கனி அமுத மயமானது; அதிசய நிலையது; தன்னை உண்டவரை கெடிது வாழச் செய்வது; அந்தக் கனியை முனிவர் ஒருவர் கண்டார்; எடுத்து வந்து இவனிடம் கொடுத்தார். நல்ல உபகாரி ஆகலால் நெடுங்காலம் சுகமாய் வாழவேண்டும் என்னும் குறிக்கோ ளோடு அந்த அருந்தவர் இந்தப் பெருக்ககைக்குக் கொடுத்துப் போளுர். இனிய சுபதினத்தில் உண்ணவேண்டும் என்று அதனை இவன் புனிதமா வைத்திருக்கான்; குறித்த நாள் வந்தது; அன்று ஒவையார் வந்தார்; அரிய அக்கனியை அப்பெரியவள் உண் னும்படி பேணித் தக்கான். அவள் பெற்று மகிழ்ந்தாள்; இவ லுடைய உள்ளன்பையும் வள்ளன்மையையும் வியந்து அம்முதி யவள் புகழ்ந்து பாடினள். பாடல் பரமநீர்மையை நாடி வந்தது. "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே! தொன்னிலைப் பெருமலே விடாகத் தருமிசைக் கொண்ட சிறியிலே நெல்லித் திங்கனி குறியாது ஆதல் கின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈந்தனேயே' (ஒளவையார்) தான் ஆலத்தை உண்டு அமுதத்தை அமரர்க்கு அளித்துப் பாதுகாத்த சிவபெருமான்போல் நீ இன்று எனக்கு அமுதக் கனி தந்து அருள்புரிந்தாப்; ஆதலால் அந்த நீலமணி மிடற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/283&oldid=1326842" இலிருந்து மீள்விக்கப்பட்டது