பக்கம்:தரும தீபிகை 5.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1823 இறைவன் போலவே நெடும் புகழோடு நீ நிலைத்து வாழுக என அத் தவ மூதாட்டி இவனை இப்படி உவந்து துதித்திருக்கிருள். நள்ளி. இவன் பெரிய கொடை வள்ளல். கோட்டி என்னும் மலே நாட்டின் தலைவன். புலவர்கள்பால் பேரன்புடையவன். வன் பரணர் என்னும் புலவரை ஒருநாள் இவன் கண்டான். தன் குடும்பத்தோடு வழி கட்ந்து வெயிலால் வருந்திக் காட்டின் இடையே ஒரு ஆலமரத்தின் அடியில் தங்கியிருக்க அவரை வேட்டைமேல் விரைந்து வந்த இவன் வியந்து நோக்கினன். அவர் பசியால் வாடியிருப்பதை அறிந்து உணவு கந்து உபசரித் தான்; பின்பு கன் கழுத்தில் அணிந்திருந்த முத்தமாலையையும் கையில் பூட்டியிருந்த இரத்தினக் கடகத்தையும் அவிழ்த்துக் கொடுத்தான். அரிய பெரிய விலையுடைய அந்த அணிகளைப் பெற்றுக்கொள்ள நாணி அவை வேண்டாம் என்று புலவர் விநயமாய் மறுத்தார். காட்டில் வந்துள்ளேன்; வேறுகொடுப்ப தற்கு ஒன்றும் இல்லை; இவற்றை அவசியம் காங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்' என்று விழைந்து வேண்டிக் கொடுத்து விட்டு அயலே அவன் விலகிப் போனன்; புலவர் பின்தொடர்ந்து :தங்கள் பேர் என்ன? ஊர் யாது? ' என்று கேட்டார். தன் பேரைச் சொன்னுல் புலவர் புகழ்ந்து வெளியே பாடி விடுவார் என்று நாணி யாதம் கூருமல் இவன் விரைந்து சென்ருன்; அவர் வியந்து நின்ருர். பிறரிடம் வினவிக் கேட்டு அங்காட்டு மன்னன் என்று தெரிந்து கெடிது வியந்தார். நிகழ்ந்தவற்றை யெல்லாம் தொடுத்துப் பெரிய பாட்டு ஒன்று பாடினர். அகன் ஒரு சிறு பகுதி அயலே வருகிறது. கருதிக் காணுங்கள். பெறுதற்கு அரிய வீறு சால் நன்கலம் பிறிதொன்றில்லைக் காட்டு நாட்டேம் என மார்பில் பூண்ட வயங்குகாழ் ஆரம் மடைசெறி முன்கைக் கடகமொடு ஈத்தனன் எங்காடோ? என நாடும் சொல்லான்; யாரிரோ? எனப் பேரும் சொல்லான்; பிறர்பிறர் கூற வழிகெட் டிசினே == இரும்பு புனேந்தியற்ருப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/284&oldid=1326843" இலிருந்து மீள்விக்கப்பட்டது