பக்கம்:தரும தீபிகை 5.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1826 த ரும தீ பி. கை இருந்த நகர் நல்லூர் என்று சிறந்து விளங்கியது. 'வயங்கு புகழ்ப் பேகன் முல்லை வேலி கல்லூரானே' (புறம், 144) என எல்லாரும் புகழ்ந்து போற்ற இவன் உயர்ந்து வாழ்ந்தான். கைம்மாறு கருதாமல் மாரிபோல் வாரி வழங்கி வந்தான் ஆக லால் இவனுடைய சீரும் சிறப்பும் பாரெங்கும் பரவி நின்றன. அஆறுகுளத்து உகுத்தும் அகல்வயற் பொழிந்தும் உறுமிடத்து உதவா துவர்கிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானேக் கழற்கால் பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்.பிறர் படைமயக் குறினே. (புறம், 142) இவனுடைய கொடை நிலையைக் குறித்து வந்துள்ள இது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. கொடைமடம் என்றது தகுதி தெரி 'யாமல் எவர்க்கும் மிகுதியாக் கொடுத்து விடுவான் என்பதாம். கொடையில் இப்படிப் பேதையாய்ப் பித்தேறியிருந்தாலும் போரில் அதிசய சதுர ய்ை அமராடி வெல்லுவன் என்பார் படைமடம் படான் என்ருர். ஈகையிலும் வீரத்திலும் ஒகையோடு வாகை பெற்று இவன் இருந்துள்ள நிலையைப் பரணர் இங்கனம் வரைந்து காட்டியுள்ளார். காட்சி கருதி நோக்கி துணுகி உணர வுரியது. புலமைச் சுவை தலைமை இன்பம் தந்து வருகிறது. ஒருநாள் இவன் வெளியே உலாவப் போயிருந்தான். அங்கே குளிர் பூம்பொழிவில் ஒரு மயில் ஆடிக்கொண்டிருந்தது; அதன் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அது குளிரால் வருக் தலாகாதே என்று இரங்கினன்; காட்டியம் ஆடிய கங்கைக்கு நல்ல சன்மானம் தருவதுபோல் தான் போர்த்தியிருந்த உயர்ந்த பொன்னடையை அம்மயில் மீது போர்த்திவிட்டு மகிழ்ந்து வங் தான். முல்லைக்கொடிக்குத் தேரைக் கொடுத்த அந்தப் பாரியை யும், மயிலுக்குப் போர்வை ஈந்த இந்தப் பேகனையும் ஒரு நிலை யில் வைத்து உலகம் பல வகையிலும் உவந்து போற்றி கின்றது. "இன்னேர் இன்னவை கொடுத்தார் யுேம் . அன்னேர் போல அவை எமக்கு ஈகென என்னேரும் அறிய எடுத்துரைத் தன்.அறு.” என்ற இயல்மொழி வாழ்த்தின் இலக்கணத்துக்கு இவரையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/287&oldid=1326847" இலிருந்து மீள்விக்கப்பட்டது