பக்கம்:தரும தீபிகை 5.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1828 த ரும தீ பி ைக நேரே சகுனத்தடை நேரினும், கருநாள் உறினும், அகாலம் ஆயி லும், தகாத மொழி கூறினும் காரியை வந்து கண்டவர் வெறுங் கையோடு மீண்டது இல்லை எனக் கபிலர் இங்கனம் பாடியிருக் கிரு.ர். இதனால் இவனது கொடையும், தகவும் நடையும் நல லும் நன்கு அறியலாகும். மலையமான் திருமுடிக் காரி என காட் டாலும் ஆட்சியாலும் இவன் பெரிய மாட்சி பெற்றிருந்தான். கன்னன். இவன் குந்தி வயிற்றில் பிறந்தவன். கருமன் முதலிய ஐவ ருக்கும் மூத்தவன். பாண்டவர் தலைவன யிருக்க வுரிய இவன் விதியின் கியதியால் துரியோகனளுேடு சேர்ந்து கொண்டான். அவனும் இவன்பால் போன்பு பூண்டு அங்கதேசத்தின் அதி பதியா நியமித்து எவ்வழியும் செவ்வையா இவனை ஆதரித்து வந்தான். இவனுடைய மதிவலியும் கொடை கலனும் படை வீர மும் அதிசய நிலையின. வண்மைக்கும் திண்மைக்கும் உண்மை யான உரிமையாளய்ை இவன் உயர்ந்திருந்தான். அதிசய விர ஞன இவன் எதிரியோடு சேர்ந்திருத்தலால் பாண்டவர் வெற்றி பெறுவது அரிது என்று கண்ணன் கருதி யுளைந்து இவனுடைய வலியைக் குறைக்க விரைந்தான்; இந்திரனே கினேந்தான்; அவன் வந்து உசாவினன். 'கவசம் குண்டலம் என இரண்டு அணிகள் கன்னனிடம் உள்ளன; அவற்றைப் பூண்டு கின்ருல் அவனே யாராலும் வெல்ல முடியாது; அந்த அணிகளைத் தந்திரமா நீ போப் வாங்கிவர வேண்டும்” என்று கண்ணன் வேண்டினன். உயிராதாரமாயுள்ளவற்றை அவன் கொடுப்பான? என்று தேவ ராசன் திகைத்தான். அப்பொழுது கண்ணன் கன்னனுடைய வள்ளன்மையைக் குறித்து உள்ளம் உவந்து உரிமையோடு சொன்ன மொழிகள் அருமை மிக உடையன, கருக வுரியன. வல்லார் வல்ல கலைஞருக்கும் மறை நூலவர்க்கும் கடவுளர்க்கும் இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும் இயக்தோர் கமக்கும் துறந்தவர்க்கும் சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் சூழும் சமயாகிபர்களுக்கும் அல்லாதவர்க்கும் இரவிமகன் அரிய தானம் அளிக்கின்ருன். (1) மைந்தற்கு உறுதி வேண்டில் வல்லே முனிவர் வடிவாகிக் சந்தப்பனுவல் இசைமாலைத் தானகானே விரைந்து எய்தி அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய்! என்ருல் அவன் ஒன்றும் இந்தப் புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான். (2) (பாரதம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/289&oldid=1326849" இலிருந்து மீள்விக்கப்பட்டது