பக்கம்:தரும தீபிகை 5.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Տ:36 த ரு ம தி பி ைக எண்ணம் தாய்மை சுரந்து எவ்வண்ணமும் இனியனுப் இயங்கி வருபவன் புண்ணியவானுப்ப் பொலிந்து வருகிருன். புண்ணியம் மிகுந்த பொழுது மனிதத் தன்மை கழிந்து போகி றது; அது போகவே அவன் தேவனுய்ச் சிறந்து திகழ்கின்ருன். சீவ கோடிகளுள் புண்ணியங்களை யுடையவர் கேவர் ஆகின் முர்;ஆகவே அவர் திவ்விய போகங்களை அனுபவிக்க நேர்கின்ருர். தேவ போகம் என்னும் வழக்கு அகன் சிறப்பை விளக்கியுளது. துறக்கம், சுவர்க்கம், புண்ணிய லோகம் எனத் தேவர்கள் வாசம் செய்யும் இடங்கள் புகழ்ந்து பேசப் பட்டுள்ளன. அரிய சுக போகங்கள் நிறைந்த இனிய தானம் என்பதை உரிய நாமங்கள் உணர்த்தி நின்றன. அந்த அதிசய இன்ப நிலையம் புண்ணியம் உடையார்க்குத் தனி உரிமையாய் அமைந்துள்ளது. | புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் * என்னும் ஈது அருமறைப் பொருளே மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மாதவம் அறத்தொடும் வளர்த்தார்? எண்ணருங் குணத்தின் அவன் இனி திருந்திவ் எழுலகு ஆள் இடம் என்ருல் ஒண்னுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டென உரைத்தல். (இராமாயணம்) அயோக்கி நகரின் சிறப்பை இது குறித்துள்ளது. போக பூமியான ஒரு புண்ணிய உலகம் என்றே அதனைச் சொல்ல வேண்டும் எனக் கருதிய கவிஞர் பிரான் வாக முறையில் எதுக் களே விரித்து இவ்வாறு இனிய சுவை கனியக் கூறியிருக்கிரு.ர். புண்ணியம் புரிக்கவர் இனிது வாழும் இடம் சுவர்க்கம் என்று சொல்லப்படும்; அத்தகைய புண்ணியவான்கள் யாவ ரும் ஆவலோடு எண்ணிப் போற்றுகின்ற இராமன் எண்ணில் காலம் தங்கியிருந்து ஆட்சி புரிந்த இடம் ஆதலால் அயோத்தி அறக்கத்தினும் மாட்சி மிக வுடையது என அதன் மகிமையைப் புகழ்ந்திருக்கிருர். காவிய நாயகன் சீவியம் கருதி யுணர வந்தது. இராமன் புண்ணிய மூர்த்தி ஆதலால் அவன் இருந்த ஊர் புண்ணிய லோகமாப்ப் பொலிந்து விளங்கியது, புண்ணியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/297&oldid=1326858" இலிருந்து மீள்விக்கப்பட்டது