பக்கம்:தரும தீபிகை 5.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1837 புரிந்தோர் புகுவது துறக்கம் என்றது இங்கே எண்ணி உணர வுரியது. சுவர்க்கத்தின் நிலை, புண்ணியத்தின் பயன், அதனை உடையவர் அடைவது முதலியன முறையே அறிய வந்தன. புண்ணியம் உடையவர் இன்ப உலகில் புகுகின்ருர். பாவம் புரிந்தவர் துன்ப நிரையத்தில் விழுகின்ருர். இந்த இரண்டும் கலந்தவர் கரும பூமிக்கு வருகின்ருர். இயற்கை நியமங்களின்படியே சிவகோடிகள் யாண்டும் இயங்கி வருகின்றன. வரவு செலவுகள் எல்லாவற்றிற்கும் மணி தன் தலைவனப் நிற்கின்ருன்; வினையின் வழியே விளங்குகிருன். ஒருவன் செய்கின்ற கருமம் கருமங்களோடு மருவி வரின் இருமை இன்பங்களும் அவனுக்கு உரிமையாப் அமைகின்றன. ஈனுலகத் தாயின் இசைபெறுாஉம் அஃதிறந்து எனுலகத் தாயின் இனிதது.ாஉம்-தான் ஒருவன் காள்வாயும் நல்லறம் செய்வாற்கு இரண்டுலகும் வேள்வாய்க் கவட்டை நெறி. (பழமொழி, 6) கருமவான் இம்மையில் புகழையும், மறுமையில் இன்பத்தையும் ஒருங்கே அடைந்து கொள்ளுகின்ருன் என இது குறிக் துள்ளது. இருமையும் இன்பமாக் கருமம் அருளி வருகிறது. அறம், கருமம், புண்ணியம் என்னும் பதங்கள் ஒரு பொருளையே குறித்து வரினும் தம்முள் துண்மையான வேறு பாடுகள் உடையன. சன்மை தீமைகளைப் பகுத்து விதி விலக்கு களே வரையறுத்து உரைப்பது அறம் என வந்தது. அரிய பல கன்மைகளை உரிமையா மருவி இருப்பது தருமம் என நேர்ந்தது. அறத்தின் விளைவுகளான இன்பங்கள் பழுத்து இனிமை சுரந்து நிற்பது புண்ணியம் என அமைந்தது. குறித்துள்ள குறிப்புகள் கூர்ந்து சிங்தித்து ஒர்க்கு தெளிக் து உணர்ந்து கொள்ளத்தக்கன. புண்ணியம் என்பது வெளியிலிருந்து வருவது அன்று. மனிதனுடைய நல்ல நீர்மைகளிலிருந்தே அது விளைந்து வருகி /றது. மனம் புனிதமாய் இனிய கருமங்களைச் செய்து வரின் அது புண்ணியமாய்ப் பொலித்து வருகிறது. "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அறம்” (குறள்,34)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/298&oldid=1326859" இலிருந்து மீள்விக்கப்பட்டது