பக்கம்:தரும தீபிகை 5.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் L839 அன்பு அருள் முதலிய பண்பாடுகள் அமைந்த பொழுது அந்த மனிதன் புனிகளுய்த் தனி நிலையில் உயர்ந்து திகழ்கிருன். உள்ளம் நல்வழியில் உருகி வரின் உயர் நிலைகள் வெள்ளம் என வெளி வருகின்றன. மனத்தின் ககுதி அளவே மனிதனுக்கு மகிமைகள் அமைகின்றன. அதன்வழியே யாவும் விளைகின்றன. இனிய நீர்மைகளுள் சீவ தயை தனி நிலையில் உயர்ந்துள் ளது. பிற உயிர்களுக்கு இரங்கி அருளின் அவன் ஒரு பெரிய மகானுய் விளங்கி வ்ருகிருன். பரிபக்குவம் அடைந்து படி எறிய வேனுக்கே அருளியல்பு கனி யுரிமையாய் அமைந்து இனிமை சுரந்து மிளிர்கிறது. கண்ணளியின் அளவு கொண்டே புண்ணிய வான் என மனிதனை மேலோர் எண்ணி யுள்ளனர். மன்னுயிர்க்கு இரங்கி இன்னருள் புரிபவன் தன்னுயிர்க்குப் பேரின்ப நிலையை நேரே செய்தவன் ஆகின்ருன். வெளியே செய்கிற தண்ணளி உள்ளே புண்ணிய ஒளியாய்ப் பொங்கி வருகிறது; வரவே அவன் எண்ணிய இன்ப நலங்கள் எல்லாம் எளிதேஎதிர்வருகின்றன. அளியால்விழுமியநிலைகள் விரிகின்றன. அளி புரிய ஒளி விரியும் என்னும் பழமொழியால் அருளா ளர்க்கு உளவாம் இன்பமும் தேசும் இனிது தெளிவாம். மன்னுயிர் ஒம்பி அருள்.ஆள்வற்கு இல் என்ப தன்னுயிர் அஞ்சும் வினே. (குறள், 244 பிற உயிர்களைப் பேணி ஒழுகும் கருணையாளர்க்கு யாதொரு அல்லலும் நேராது; எவ்வழியும் நல்ல இன்பங்களே உளவாம் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிருர். அருள் இயல்பு எவ் வுயிர்க்கும் இதம் புரிந்து வருதலால் அதனை யுடையவர் யாதும் துன்பம் காணுமல் யாண்டும் இன்பமே கண்டு வருகின்ருர். எந்த உயிர்க்கும் இடர் கினையாக சிங்தை ஒருவனுக்கு அமையுமாயின் அங்கமில்லாத இன்ப கிலே அவனுக்குச் சொந்த மாயமைகிறது. இன்னுமை ஒழியவே இனிமைகள் விளைகின்றன. ஒருவனேக் தருமவாகுக்கி இருமையும் இன்பம் தரவல்ல மருமம் கருணையினிடத்தே கனிந்திருக்கிறது; இதனை உறுதியா யுணர்ந்து உரிமை செய்து கொண்டவன் எவ்வழியும் திவ்விய மகிமைகளை எப்திச் செவ்விய பேரின் பங்களை நுகர்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/300&oldid=1326861" இலிருந்து மீள்விக்கப்பட்டது