பக்கம்:தரும தீபிகை 5.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1840 த ரும பிேகை அருள் மருவி வர அறம் பெருகி வரும்; வரவே அருளா ளன் புண்ணியவாளுப் ஒளி மிகுந்து எண்ணிய இன்பங்களே எய்தி மகிழ்கின்ருன். இனிய சுகங்களுக்கு அருள் மூலமாயது. ஒருவன் செய்கிற கருமங்கள் நன்மை கோப்ந்து வரின் அது நல் வினையாப் அவனுக்கு நலம் பல கருகிறது. இனிய செயல்களிலிருந்து அறம் விளைந்து வருதலால் அகனையுடையவன் அரிய பல மேன்மைகளை அடைந்து கொள்கிருன். தனக்குத் துணை ஆகித் தன்னே விளக்கி இனத்துள் இறைமையும் செய்து-மனக்கினிய போகம் தருதலால் பொன்னே! அறத்துணையோடு = ஏகமாம் கண்பொன்றும் இல். (அறநெறிச்சாரம்) அறம் மனிதனுக்குச் செய்யும் மகிமைகளை இது இனமா விளக் கியுளது. எவ்வழியும் உறுதித் துணையாய் நின்று உதவி புரியும்; சமுதாயத்துள் தலைவகை உயர்த்திப் பெருமைப்படுத்தும்; இனிய இன்ப போகங்களை நல்கும்; ஆதலால் அறம் போல் உரி மையான நல்ல துணை பாண்டும் இல்லை எனச் சொல்லி யிருக்கும் இதனை ஈண்டு உள்ளி உணர்ந்து கொள்ள வேண்டும். பலகாளும் ஆற்ருர் எனினும் அறத்தைச் சிலநாள் சிறந்தவற்ருல் செய்க-முலேநெருங்கி கைவது போலும் நுசுப்பிய்ை! நல்லறம் செய்வது செய்யாது கேள். (பழமொழி 134) எந்த வழியிலேனும் கொஞ்சமாவது அறக்கைச் செய்து கொள்க; அதனல் எல்லா இன்ப நலங்களும் உளவாம்; பெற்ற தாயை விட உன்னே அது பேணியருளும்; அது போல் யாரும் உனக்கு இகம் செய்ய முடியாது என்னும் இது இங்கே அறிய வுரியது. அறம் அமுத சுரபியாய் கின்ற யாவும் தருகின்றது. கிறைந்த செல்வங்களும் சிறந்த சுகபோகங்களும் வேண் டும் என்றே மனிதன் யாண்டும் விரும்புகிருன்; அந்த விருப்பம் விரைந்து நிறைவேற வேண்டுமானல் அவன் புண்ணியத்தை விழைந்து செய்துகொள்ள வேண்டும். எண்ணிய இன்ப நலங் களையெல்லாம் இனிது உதவ வல்லது புண்ணியமே ஆதலால் புனிதமான தெய்வத்திரு என அமரரும் அதனை எண்ணி வியக் துள்ளனர். தெய்வ பதவியை அது இங்கே செப்தருளுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/301&oldid=1326862" இலிருந்து மீள்விக்கப்பட்டது