பக்கம்:தரும தீபிகை 5.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1842 தரும பிேகை போல் தெரியினும் முடிவில் அ.தி பழி பாவங்களை நிறுத்தி அழி துயரங்களை விளைத்து அடியோடு ஒழிக்கே போய்விடும். களவில்ை ஆகிய ஆக்கம் அளவிறந்து ■■ ஆவது போலக் கெடும். (குறள், 283) உள்ளம் கோடிக் கள்ள வழியால் ஈட்டிய பொருள் வெள்ளம் போலப் பெருகிக் தோன்றினும் ஒல்லையில் முழுதும் ஒழிக்கே போம் எனத் தேவர் இவ்வாறு உறுதியாய் உணர்த்தியுள்ளார். தமக்கு நேர்கிற கேடு தெரியாமல் பொருள் மேலுள்ள மருளால் பழி வழிகளில் விழைந்து பலர் அழி துயரங்களை அடைகின்றனர். பாவத்தால் வருவது பழியும் துன்பமுமேயாம். அறத்தான் வருவதே இன்பம்” (குறள், 39) என்ற கல்ை பிற வழிகளால் வருவன எல்லாம் துன்பங்களேயாம் என்பது தெரிய வக்கது. கருமம் ஒன்றே இருமையும் இன்பம் தரும். தருமம் ஆவதே இன்பம் தருமலால் தருமம் நீக்கும் கருமம் ஆவதுபோல் தோன்றிக் காட்டினும் பசுமட்பாண்டத்து அருமையாய் கிாப்பும் தெண் னிர் அனேத்தும் அப் பாண்டத்தோடும் ஒருமையாய்க் கெடுதலே போன்று ஒருகணத்து அழியு மன்றே. (மெய்ஞ்ஞான விளக்கம்) பசிய மண் பாண்டத்தில் நிரப்பி வைத்த தண்ணிர்போலப் பாவ வழியில் வக்க பொருள் விரைவில் அழிந்துபோம் என இது உணர்த்தியுள்ளது. பானை விரிந்து நீர் முழுதும் இரிந்து ஒருங்கே அழிதல் போலக் கரவால் சேர்க்க பொருளும் அக்க ஆளும் குடியும் அடியோடு ஒழிந்துபோம் என்பது உவமையால் தெளிந்துகொள்ள வக்கது. சுகமாப் வாழவேண்டும் என்று மனிதன் பொருளை ஈட்டுகிருன்; அந்த ஈட்டத்தில் பாவம் கலந்தால் அது துக்கத்தையே கீட்டி ஒக்க ஒழிந்து போகின்றது.

தீவினை விட்டு ஈட்டல் பொருள்” என்ருர் ஒளவையார்’ தீவினையால் வந்த பொருள் அல்லலே புரியும்; அது இல்லாததே நல்ல பொருளாய் யாண்டும் இன்பம் கரும் என இப்பாட்டி காட்டியிருக்கும் காட்சி கருதி நோக்கத் தக்கது. பழி வழிகளில் பொருள் பெருகி வந்தாலும் சாக்கடை நீர்போல் மேலோரால்

.இழிக்கவே படும். இழிவில் வருவது இழிவாய் அழியும் اتنی (انگی۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/303&oldid=1326866" இலிருந்து மீள்விக்கப்பட்டது