பக்கம்:தரும தீபிகை 5.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1846 த ரும பிேகை தான்; அது பொழுது தேவர் கோன கோக்கி அவன் உரைத்த உரைகள் உணர்வுநலம் சுரந்து வந்தன.அயலே வருவனகாண்க. "ஈண்டுச் செய்வினே ஆண்டு துகர்ந்திருத்தல் காண்டகு சிறப்பின்தும் கடவுளர் அல்லது அறம்செய் மாக்கள் புறம்காத்து ஒம்புகர் நற்றவம் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர்கன் ட்ைடுக்கு இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே! வருந்தி வந்தோர் அரும்பசி களேந்து அவர் திருந்துமுகம் காட்டும்என் தெய்வக் கடிஞை உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ பெண்டிர் கொல்லோ பேனுகர் கொல்லோ யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்!” (மணிமேகலை, 14) தேவராசனே! உனது நாடு இனிய போகங்களை அனுபவிக்க வுரியதே அன்றிப் புண்ணியங்களைச் செய்து கொள்ள இயலாது; ஆதலால் நான் அங்கே வர முடியாது என்று ஆபுத்திர ன் மாபுத்தியுடன் கூறியிருப்பது இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது. "பொலம் பூங்காவின் கன்னட் டோரும் செய்வினே மருங்கின் எய்தல் அல்லதை உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் கடவது அன்மையின் கையற வுடைத்து.” (புறம், 58) பொன்னுட்டின் கிலேயைக் குறித்து ஆவூர் மூலங்கிழார் இவ்வாறு காட்டியிருக்கிரு.ர். கருமங்களைச் செய்து மேலான நிலைகளுக்கு அங்கிருந்து செல்ல முடியாது ஆதலால் கரும வீரர்கள் மருமமா அதனை இங்கனம் இகழ்ந்திருக்கின்றனர். "ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன்க ணவர்.” ஈகையின் இனிமை இன்றி, அருள் வளர்ச்சி குன்றி, அறப்பேறு பொன்றி வெறும் சுகபோகமே ஒன்றியுள்ளமையால் வான வாழ்வு ஞானவான்களுக்கு ஈனமாய்த் தோன்ற சேர்ந்தது. புண்ணியப் பயணுகிய போக நுகர்வு முடிந்தவுடன் தேவரும் ஆவி அழிய நேர்கின்ருர். சீவிய நிலை தாழ்ந்து போகின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/307&oldid=1326870" இலிருந்து மீள்விக்கப்பட்டது