பக்கம்:தரும தீபிகை 5.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் னிய ம் 1845 களுக்குத் தனி நிலையமாப் கின்ற நாடு அவகேடுகளுக்கு இட மாய் அவலம் அடைந்திருக்கிறது. கண்ணிய புலேகள் ஒழிந்து புண்ணியநிலைகள் வளர்ந்து யாண்டும்புனிதம் ஓங்கிவர வேண்டும். - = = 7.44 போந்து நுகரின்பம் புண்ணியத்தால் புண்ணியமோ ஒர்ந்துபுரி கல்வினையால் ஊறுமால்-தேர்ந்திதனேக் காணுமல் தீவினையைக் கண்டபடி செய்கின்ருர் நானுர்கொல் பின்னம் கவை. (+) இ-ள். ஐம்பொறிகளின் போக நுகர்வுகள் புண்ணியத்தால் அமைகின் றன; புண்ணியம் நல் வினைகளால் வருகிறது; இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல் தீமைகளைச் செய்பவர் பின்பு துன்பங் களை அனுபவித்துத் துடித்து வருக்க கேர்கின்ருர் என்பதாம். சுகபோகங்களின் மூல காரணத்தை இது கூறுகின்றது. உயிரினங்களுள் மனித இனமே சுவை நுகர்வுகளில் உயர் கிலே பெற்றுள்ளது. அருந்தல் பொருக்கல்களைத் திருந்திய முறையில் சுவை செய்து எவ்வழியும் செவ்வையாய் இனிது அனுபவிக்கி றது. இந்த இன்ப போகங்கள் எல்லாருக்கும் ஒரு படியாய் இயல்பாக அமையவில்லை. அவரவர் செய்த நல்வினைகளின் அளவே பல் வகையிலும் படி எங்கும் படி அளந்துள்ளது. சிறந்த புண்ணிய முடையவர் உயர்ந்த இன்பங்களை அனு பவிக்க உரிமை பெற்று வருகின்ருர். அரசர், கக்கருவர், தேவர் முதலானவர்கள் இந்த வரிசையில் உயர்ந்து நிற்கின்ருர். புண் னியப் பயணுகிய போகங்களை நுகர வே தேவருலகம் அமைக் திருத்தலால் அங்கே நல்ல கருமங்களைப் புரிந்து தருமங்களைப் பெற இயலாது. இன்பக் களிப்புகளேஅங்குப் பொங்கியுள்ளன. ஆபுத்திரன் என்பவன் சிறந்த சிவகாருணியமுடையவன்; பிறவுயிர்களுக்கு இதம் செய்வதே பிறவிப்பயனக் கருதினவன்; அமுதசுரபி என்னும் அதிசய பாத்திரத்தால் உயிர்களின் பசித் துயர்களை நீக்கி உதவி புரிந்து வங்கான். அவனுடைய புண்ணிய நீர்மையை வியந்து இந்திரன் நேரே தோன்றிப் பொன்னுலகத் துக்கு வரும்படி அவனே உவந்து வேண்டினன். அவன் மறுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/306&oldid=1326869" இலிருந்து மீள்விக்கப்பட்டது