பக்கம்:தரும தீபிகை 5.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1844. த ரும தீ பி. கை முள்ள காடு கால வேற்றுமையால் இ வ் வா று சீரழிந்து போயிருக்கிறது. மடமையிருள் மண்டிக் கொடுமை விரிந்துளது. மனிதர் மனம் பொருளாசையால் மருள்கொண்டு இருள் மண்டியிருக்கலால் கரும நெறி தெரியாது போயது. அணு அளவு புண்ணியத்தால் அடைகிற பொருளை மலை அளவு முயற்சி யாலும் அடைய முடியாது. அருமையான இக்க தெய்வத் திரு வின் கருவை அறியா திருப்பது பெரிய பரிகாபமே யாம். கேர் மையான முறையில் பண்ட மாற்றுகளைச் செய்து நம் முன்னேர் சீர்மையும் சிறப்பும் எ ப்தி வந்துள்ளனர். அவ்வுண்மைகளைப் பழந் தமிழ் நூல்களில் உணர்ந்து உளம் களிகூர்கின்ருேம். 'உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை மண்ணுவ மணிபொன் மலேய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் புண்ணிய வணிகர் மனே மறுகு ஒருசார்.” (பரிபாடல்) ஆடை கூலம் அணி முதலிய பல வகைப் பொருள்களையும் மனச் செம்மையோடு நாணயமாய் வாணிகம் புரிந்து வந்தவரை இது வரைந்து காட்டியுள்ளது. புண்ணிய வணிகர் என அவரைக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. இத்தகைய உத்தம வணிகர்களை இந் நாடு முன்னம் பெற்றிருந்தமையால் மற்றைய நாடுகளும் வியந்து நோக்கப் பெருஞ் செல்வங்கள் இங்கே பெருகி யிருந்தன. பொங்கிய புகழ்களும் பொலிந்து விளங்கின. கட்டுஒன்று கலம்காட்டிக் கதிர்உழக்கு நெற்காட்டிக் கடல்சூழ் ஞாலம் தட்டுஒன்றும் இல்லாமல் சார்ந்தஉயிர் இனங்களெல்லாம் ஆர்க்கு வாழ இட்டுண்டு பெரும்புகழை ஈட்டிவந்த இந்தியா இன்று கொந்து பட்டினியின் படுதுயரைப் பார் எங்கும் பார்த்துளதே பாவம் என்னே? (இந்தியத்தாய்கிலே) இக்காடு ப்ண்டு நல்ல வளம் படிந்திருந்தது; இன்று பொல்லாத வறுமை புகுந்து புலையாடி கிற்கின்றது; இக் கிலைக்குக் காரணம் என்ன? மக்களிடம் புண்ணிய சீர்மைகள் மங்கிப் பாவத் தீமை கள் பொங்கியுள்ளமையே யாம். தவம் தானம் ஞானம் தருமங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/305&oldid=1326868" இலிருந்து மீள்விக்கப்பட்டது