பக்கம்:தரும தீபிகை 5.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1865 ஒருவனிடம் பெரும் பொருள்கள் நிறைந்திருந்தாலும் ஊழ் உதவவில்லையானுல் அவற்றை அவன் அனுபவிக்க முடியாது; ஊழ் வகுத்த வகையே உயிர்கள் நுகர்த்து வருகின்றன எனத் தேவர் இவ்வாறு து கர்ச்சி நிலைகளே கன்கு குறித்திருக்கிரு.ர். நல்வினையின் பயனன இன்ப போகங்களும், தீவினையின் விளைவான துன்ப வேதனைகளும் அவற்றைச் செய்தவனே நோக்கி வந்துகொண்டே யிருக்கின்றன. தான் செய்து வைத்த கருமத் தின் விளைவுகளையே மருமமா மனிதன் மருவி வருகிருன். கெஞ் சம் கருதியபடி அடையாமல் முன்பு நேர்ந்தபடியே அடைந்து வருதலால் மாக்கர் யாண்டும் அவலக் கவலைகளால் அமைந்து வருகிரு.ர். விதியின் விளைவுகள் அதிசய நுழைவுகளாயுள்ளன. வருக்தி அழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவன போமின் என்ருல் போகா--இருந்தேங்கி கெஞ்சம்புண் ஆக நெடுந்து ரம் தாம்கினேந்து == துஞ்சுவதே மாந்தர் தொழில். (1) உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர்சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக் கடல்ஒடி மீண்டு கரைஏறி ெைலன் உடலோடு வாழும் உயிர்க்கு. (2) எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே! கருதியவா ருமே கருமம்-கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினே. (3) (ஒளவையார்) வினையின் விளைவுகளைக் குறித்து ஒளவையார் இவ்வாறு செவ்வை யாக விளக்கியிருக்கிருர், கவிகளின் பொருள்களையும் குறிப்பு களையும் சுவைகளையும் கருத்துளன்றி உணர வேண்டும். நல்ல கருமங்களைச் செய்யுங்கள்; அவை கருமங்களாப் வருகின்றன; அவற்ருல் நீங்கள் அரிய பல இன்பங்களை அடை யலாம்; அவ்வாறு செப்யாமல் இருக்கால் எவ்வழியும் இடர் களே காண்பீர்! எனப் பாட்டி இங்கே நன்கு காட்டியுள்ளாள். :பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.” (ஒளவையார்) என்றது நுண்ணிய பொருளுடையது. எண்ணி யுனா வுரியது. 234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/326&oldid=1326891" இலிருந்து மீள்விக்கப்பட்டது