பக்கம்:தரும தீபிகை 5.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1864 தரும தீபிகை கருமம் இருக்கும் அளவே ஒருவன் பெருமையும் சுகமும் பெற்று வருகிருன்; அது அற்றதாயின் அவன் அவமே இழிந்து படுகிருன். அறம் இழந்த போதே அவலங்கள் விளைகின்றன. புண்ணியம் தெய்வீகமுடையது; அதனை மருவி மகிமை பெறுக; அப்பேறு எப்பேற்றினும் யாண்டும் இன்பமாம். == 749. எண்ணியகல் இன்பமெலாம் எய்தி இருமையும்ர்ே கண்ணி மகிழ கனியருளும்-புண்ணியத்தைப் பேணி வருமின் பிழைப்பின் பெருந்துயரம் காண வருவீர் கடிது. (க) o இ-ள். கருதிய இன்ப நலங்களை எல்லாம் இனிது அருளி இம்மை யிலும் மறுமையிலும் உயிர் உவந்து வாழப் புண்ணியம் விரைந்து அருளுகிறது; இத்தகைய புண்ணியத்தைப் பேணி உத்தம நிலை யில் வாழுங்கள்; பேணுது ஒழியின் எவ்வழியும் பெருந்துயரே அடைந்து அழிவிர்; அழிவுநேராமல்விழியூன்றி உயர்கஎன்பதாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கை வசதிகள் அவன் செய்த வினேயின் அளவே விளைந்து வருகின்றன. நல்ல வினைகளை நாடிச் செய்தவனிடம் செல்வ வளங்கள் சேர்ந்து நிற்கின்றன. அங்ங் னம் செய்யாதவன்பால் அவை சேராது போகின்றன. ஒருவன் வளம்பெற்று வாழ்வதும், வறுமையுற்றுக் காழ்வதும் இயல்பாக நிகழ்வன அல்ல; அவனுடைய வினேவிளைவுகளே மூலகாரணங்க ளாயுள்ளன. கரும போகங்கள் மருமங்களாய் வருகின்றன. கான் செய்த இனிய கருமங்களின் விளைவே ஒருவனுக்குக் தருமமாய் மருவி அரிய பல போகங்களை உரிமையாய் அருளு கின்றது. அவ்வாறு நல்ல கருமங்களைச் செய்து கருமத்தை விளைத்துக் கொள்ளாதவன் எவ்வழியும் அல்லல்களையே அடைய நேர்கின்ருன். ஊழ் ஊட்ட மனிதன் உண்டு வருகின்றன். அது ஊட்ட வில்லையானல் எவனும் எதையும் உண்ண முடியாது. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் அதுய்த்தல் அரிது. (குறள், 377)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/325&oldid=1326890" இலிருந்து மீள்விக்கப்பட்டது