பக்கம்:தரும தீபிகை 5.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புன் ணியம் 1863 திண்ணம்.காம் அறியச் சொன்ளுேம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார்; அமரர் ஆவார். (திருவாய்மொழி) தெய்வ சிந்தனை பெரிய புண்ணியம்; அது பிறப்பை நீக்கிப் பே ரின்பம் அருளும் от :Г நம்மாழ்வார் இங்ஙனம் அருளியிருக்கிரு.ர். புண்ணியம் உடையவர் அரிய பல செல்வங்களை எளிதே பெறு கின்ருர், அதனை அடையாதவர் அரும்பாடு பட்டாலும் யாதொரு பலனும் கிடையாமல் வருக்தி யுழல்கின்ருர். கருமம் ஆகிய உரம் கலந்தபோது தான் கருமம் சிறந்த பயனேத் தருகிறது. அது கலக்கவில்லையானுல் கடுமுயற்சி செய்தாலும் மனிதன் கலக்கத் தையே காண்கிருன். கல்லதை இழந்ததால் அல்லலே அடைந்தது. எண்ணில் எண்கினம் இட்ட கிரிக்குலம் உண்ண உண்ணச்சென்று ஒன்றிைேடு ஒன்றுறச் சுண்ண நுண்பொடி யாகித் தொலைந்தன. புண்ணியம் பொருங் தாத முயற்சிபோல். (இராமா, சேதுபந்தனம் 44) கடலில் அணைகட்டக் கரடிக்கூட்டங்கள் மலைகளை வாரி எறிந்தன; அவை ஒன்ருேடு ஒன்று காக்கி இடையே நொறுங்கி ஒழிந்தன; அனேக்குப் பயன்பட வில்லை; புண் ணியம் பொருங்காத முயற்சி எண்ணிய பயனை எ ப்காததுபோல் அவை இழிந்து போயின எனக் கவி உணர்த்தியிருக்கிரு.ர். கருத்தின் நிலையைக் கருதி உணர வேண்டும். உவமைக்குறிப்புகள் உயர்பொருளுடையன. பொழுது நீட்டிய புண்ணியம் போனபின் பழுது செல்லுமன்றே மற்றைப் பண்பெலாம் தொழுது சூழ்வன முன்னின் அறு தோன்றவே கழுது சூழ்ந்தன. இராவணன் கண்ளலாம். (இராவணன் வதை, 165) நீண்ட காலமாக இராவணன் புண்ணிய போகங்களை அனு பவித்து வந்தான்; இறுதியில் அக்கப் புண்ணியம் கழிந்து போயது; பாவம் விளைந்து வந்தது; வரவே தேவரும் எவல் புரிய வாழ்ந்த அவனுடைய கண்களைப் பேய்கள் தோண்ட நேர்ந்தன; பேரழிவுகள் மூண்டன என்று நேரே இது காட்டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/324&oldid=1326889" இலிருந்து மீள்விக்கப்பட்டது