பக்கம்:தரும தீபிகை 5.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1862 த ரும பிே கை வருகிறது. புண்ணியன் என்று கடவுளுக்கு ஒரு பெயர். ஆகவே புண்ணியம் உடையவர் எவ்வளவு தெய்வீக மகிமைகளை எய்தி யுள்ளனர் என்பதை எளிதே தெளிந்து கொள்ளலாம். புண்ணியன் எந்தை புனிதன் இணையடி கண்ணி விளக்கென ஞானம் விளேந்தது மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும் அண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே. [1] புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீர்உண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரியா கிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனே நண்ணறி யாமல் கழுவுகின் ருரே." (திருமந்திரம்) பரம புண்ணியனை இறைவனே எண்ணி ஒழுகுவது பெரிய புண்ணியம்; அவ்வாறு எண்ணுமல் பலர் மண்ணுப் மடிந்து போகின்ருரே என்று திருமூலர் இவ்வாறு மறுகி இரங்கி யிருக்கி ருர். அரியபிறவியை அடைந்தும்.அவலமாயழிவது.பரிதாபமாயது. “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா! உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரம்தர வேண்டும்.” (தேவாரம்) அப்பர் இப்படி ஆண்டவனை நோக்கி வேண்டியிருக்கிரு.ர். என்ன புண்ணியம் செய்தனே கெஞ்சமே! இருங்கடல் வையத்து முன்னம் புேரி கல்வினேப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனே வாயாரப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதேைல. (தேவாரம்) பரமனைக் கருதி ஒழுக நேர்ந்தது அரிய புண்ணியம் என்று வியந்து தமது நெஞ்சை நோக்கித் திருஞானசம்பந்தர் இங்கனம் உருகி உரையாடியிருக்கிரு.ர். உரையுள் உணர்வுநிலை ஒளிர்கிறது. புண்ணிய மூர்த்தியான கடவுளை உரிமையோடு எண்ணி ல்ை மனிதன் பெரிய புண்ணியவானப் அரிய மகிமைகளை அடைகிருன். அக்கப் பாக்கியங்களைப்பெற்று மகிழ்ந்த மேலோர் உலகம் நலமுற உறுதி நலன்களை உரிமையாய் உரைத்திருக்கிரு.ர். புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் துரவி எண்ணுமின் எந்தை காமம் இப்பிறப்ப அறுக்கும்; அப்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/323&oldid=1326888" இலிருந்து மீள்விக்கப்பட்டது