பக்கம்:தரும தீபிகை 5.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to . 67. கொடுமை 1573 கல்ல அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்தும் உரிய உறுதி கலங்களை அடையாமல் கொடியரா யிழிந்து போவது நெடிய மதிகேடாய் நீண்டு நிற்கின்றது. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி அல்லவை செய்கொழுகு வார்.' (குறள், 246) 'உயிர்களிடத்து அருளின்றிக் கொடுமைகளைச் செய்பவர் உறுதிநலனே இழந்து கம் உ யிர்க்கு நெடிய துயரங்களைச் செய்து கொள்ளுகின்றனர்” எனத் தேவர் இங்கனம் இரங்கி மறுகியுள் ளார். அருள் நீங்கிய அளவில் இருள் ஓங்கி வருகிறது; எவ்வழி யும் இன்னலே விங்கி இழிபழிகள் எழுகின்றன. “அருள்தீர்ந்த காட்சியான் அறன்நோக்கான் நயம்செய்யான் வெருவுற உய்த்தவன் நெஞ்சம்போல் பைபய இருள்துார்பு புலம்பூரக் கனேசுடர் கல்சேர.” (கலி-120) 'அருள் இல்லாதவன் தரும நோக்கமின்றி யாதும் இதம் செய்யாமல் எவ்வுயிரும் வெருவும்படி யாண்டும் கொடுமையே செய்வான்; அவனுடைய நெஞ்சம் இருள் மண்டியிருக்கும்’ என இது குறித்துள்ளது. உரைக் குறிப்புகள் ஊன்றி உணர வுரியன. அருள் இழந்தவள் மருள் உழந்து மடிகின்ருன். கோடி மிகினும் இழிவே காட்டும். என்றது கொடிய இயல்பின் முடிவு காட்டி நின்றது. உள்ளத்தில் கொடுமையுடையவன் வெளியே எ வ்வளவு கல்ல செல்வங்களை எய்தியிருந்தாலும் இதம் செய்யான்; எவ் வழியும் அல்லலே செய்வன்; அவன் வாழ்வு அவலமேயாம். இனியது செய்யாமல் இன்னுமையே புரியும் இயல்பு கொ டியவரிடம் அமைந்திருத்தலால் அ வ ர் நெடிய செல்வங்களை அடைந்திருக்தாலும் மதிப்பும் மாண்பும்பெருர்; பழிப்பும் இழிப் புமே பெற்றுப் பாழ்பட்டு உழலுவார் என்க. மைதிர் பசும்பொன்மேல் மாண்ட மணி அழுத்திச் செய்தது எனினும் செருப்புத்தன் காற்கேயாம் எய்திய செல்வத்த ராயினும் கிழ்களேச் செய்தொழிலால் காணப் படும் (நாலடியார், 347)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/34&oldid=1326591" இலிருந்து மீள்விக்கப்பட்டது