பக்கம்:தரும தீபிகை 5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1572 த ரு ம தீ பி. கை அன்புலம் என்றும் அமுதாம்; கொடுமையோ துன்ப விடமாம் தொடல். துன்பநிலை ஒருவி இன்பகலம் பெறுக. 664. கொடுமையுளம் கொண்டான் கோடி மிகினும் கடுமொழியும் கையிழிவே காட்டும்-கெடுமரமாய் கின்று கனிநீழல் நீட்டினும் எட்டிதான் கன்று கனிவாமோ நாடு. (+) இ-கள் எட்டிமரம் நெடிது வளர்ந்து நிழல் விரிந்து கனி சொரியி லும் தீமை மிகுந்தே நிற்கும்; அதுபோல் உள்ளத்தில் கொடு மையுடையவன் வெளியே நல்ல செல்வங்களை எய்தியிருந்தாலும் சொல்லும் செயலும் இழிந்து அல்லலாகவே யிருக்கும் என்க. இனிய பண்பு மனிதனைத் தனி நிலையில் உயர்த்துகிறது. அருள் நீர்மை தோய்ந்த அளவு பெரு மேன்மைகள் வாய்ந்து வருகின்றன. உயர்ந்த சான்ருேள் சிறந்தமேலோர் என விளங்கி நிற்பவர் எவரும் அன்பான குண நலங்களாலேயே எங்கும் இன்ப நிலையமாய் உயர்ந்து வந்துள்ளனர். தண்ணளி எவ்வழியும் இதங்களையே செய்து வருதலால் அதனையுடையவர் புண்ணிய சீலர்களாய்ப் பொலிந்து விளங்கு கின்றனர். எவரையும் உத்தம நிலையில் உயர்த்துகின்ற இத்த கைய நல்ல நீர்மையை இழந்து பொல்லாத புன்மைகளைப் பழகி வருபவர் என்றும் புல்லியராயிழிந்து அல்லஅழந்து அழிகின்ருர். மனம் கடுமையாய்க் கொடுமை படிந்தபொழுது மனிதன் கொடியவன் தீயவன் என நெடிய பழிகளை அடைய சேர்கின் முன், நெஞ்சம் கெடவே நஞ்சம் படிக் து காசம் வருகின்றது. தன் உள்ளத்தில் இனிய இரக்கம் இல்லாமையால் பிற உயிர்களுக்குக் கொடிய துன்பங்களைச் செய்யத் துணிகிருன். அந்த நீசச் செயல்கள் தனக்கே காசங்களை விளைத்து வருகின் றன. வரவே பிறவிகள்தோறும் பெருக் துயரங்களே அடைந்து சரக வாழ்க்கையாப் அவன் கைங்து உழலுகின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/33&oldid=1326590" இலிருந்து மீள்விக்கப்பட்டது