பக்கம்:தரும தீபிகை 5.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொடும்ை 1571 போய்ப் பிறர்க்கு அல்லல் செய்வர் ஆதலால் பாம்பு முதலிய கொடிய பிராணிகளினும் தியவர் மிகவும் கொடியராயுள்ளனர். நெஞ்சம் கொடுமையாய்த் தீமையே செய்யும் தீம்பர் யாதொருவகையிலும் கல்லது நாடார்; எவ்வழியும் அல்லலே செய்வர்; பொல்லாத அந்தப் புலையாளர் எங்க நிலையிலும் திருக் தாமல் ஈனமே புரிதலால் அவரைப் பார்ப்பதும் பழிகேடேயாம்.

பாம்பு கடித்தால் அதுவும் நீக்க வல்லோம்; பசாசு அறைந்தால் நீறிட்டுப் பார்க்கவல்லோம்; வேம்பு கசப்புஅறக் கறியும் ஆக்க வல்லோம்: விறல்வேழத்து அதிகமதம் தணிக்க வல்லோம்; சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம்; தரணியின்மேல் கல்லாதது ஒன்றுமில்லை; திம்பரை நல்லவராக்கிக் குணமுண்டாக்கும் திறம் ஒன்றும் அறியாமல் திகைக்கின்ருேமே.”

தியவர் யாதும் எவ்வகையிலும் திருக்காமல் தீமையிலேயே செருக்கித் தீங்கு புரிந்து திரிவார் என இது உணர்த்தியுள்ளது. உள்ளம் கொடுமையாப்ப் பாழ்பட்டபொழுது இப்படிப் படுபாதகளுப் கிமிர்ந்து மனிதன் இழிந்து அழிந்து போகிருன். நெஞ்சில் கொடுமை வளர்ந்து வரவே அங்கே இரக்கம் அன்பு முதலிய நல்ல பண்புகள் ஒழிந்து போகின்றன; பொல் லாத புலைகளே கலையெடுத்து நிற்கின்றன. தீயபழக்கங்களில் பழகிவந்துள்ள அவ்வளர்ச்சி தீமைகளைத் துணிந்து செப்கின் றது. நல்லோர் அஞ்சி கடுங்குகின்ற தீமையைப் பொல் லாதவர் அஞ்சாமல் செய்வது நெஞ்சம் படிந்துள்ள கொடு மையிஞலேயாம். கொடிய பழக்கத்தினலேயே மனிதன் கொடி யவளுப் மாறி நெடிய சேங்களைச் செய்கின்ருன். “There is a method in man’s wickedness, It grows up by degrees.” (Beaumont)

மனிதனுடைய தீமையும் படிமுறையே வளர்ந்து வருகி மது” என்னும் இது இங்கே அறியவுரியது.

கொடுமையைப் பழகிக் கொடியவனுயிழிந்து போகாமல் ான்மையைப் பழகி யாண்டும் நல்லவனப் உயர்ந்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/32&oldid=1326589" இலிருந்து மீள்விக்கப்பட்டது