பக்கம்:தரும தீபிகை 5.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ ர சு 1881 அடிபணிந்த திருமகனே ஆகமுற எடுத்தணேத்து கெடிதுமகிழ்ந் தருந்துயரம் நீங்கின்ை கிலவேந்தன்; மடிசுரங்து பொழி தீம்பால் வருங்கன்று மகிழ்ந்துண்டு படிகனேய வரும்பசுவும் பருவரல்ங்ே கியதன்றே. (3) (பெரியபுராணம்) இங்கே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகள் மிகுந்த வியப்புகளை விளைத்து கிற்கின்றன. அரசனுடைய ஆட்சி முறையும் தரும நீதியும் கரும வீரமும் உலக உள்ளங்களை உருக்கியுள்ளன. இப்படி ஒரு அரசன் இருந்தால் அந்த காட்டு மக்கள் அவனே எப்படிப் போற்றி கிம்பர் உலகம் முழுவதும் உழுவ லன்போடு அவனை உவந்து கொண்டாடுமே யன்றி அயலே மயலாப் வேறு ஏதேனும் எண்ணுமா? இத்தகைய உத்தம அர சர்கள் மறைந்து போனமையால் வேறு சில தலைமைகள் கிளைத்து மாறுபாடுகளை விளைத்து மீறி வர சேர்ந்தன. குடி அரசு, சனநாயகம், சமுதாய ஆட்சி எனச் சில வகை யான நிலைகள் கால வேற்றுமைகளால் படி படிய வந்தன. எது எப்படி வந்தாலும் அது ஒரு தலைவனைத் தாங்கிக் கொண்டே கிற்கிறது. எவனும் அந்த நிலைக்கு வந்து சேரலாம். வந்தவ இடைய நிலைமைக்குக் தக்கபடி தலைமையும் நிலைத்து வருகிறது. பரம் பரையாய் உரம் பெற்று வராமல் புது புதிதாய் வரம் பெற்று வருதலால் வந்த கலைமை எந்த வகையிலும் உண்மை யான கம்பீரமில்லாமல் சிந்தை தளர்ந்து தியங்கி யிருந்து காலம் கழிக்கவுடன் சாலவும் அயர்ந்து கோலம் ஒழிந்து போகிறது. முடி அரசு என்னும் மொழி விழுமிய பொருளுடையது. அரச வாசனை தோய்ந்து உரிமையோடு தொடர்ந்து வருதலால் தேச மக்கள் அவன் பால் பேரன்பு பூண்டு பெருகி வருகின் றனர். அவனும் தன் ஆவிபோல் யாவரையும் ஆதரவோடு பேணி வருகின்ருன். பாதுகாப்பு பண்பு படிந்து பயன் சுரந்துவருகிறது. வையம் இன்பு:றின் மன்னன் இன்புறும்; வெய்யது ஒன்றுறின் தானும் வெய்துறும்; செய்ய கோலிய்ை! செய்ய லாவதன்று ஐய தாரினன் அருளின் வண்ணமே, (#) 236 ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/342&oldid=1326908" இலிருந்து மீள்விக்கப்பட்டது