பக்கம்:தரும தீபிகை 5.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ சு 1895 பல பலன்களையும் அரசன் அடைவான். மடி மடமை முதலிய இழிவுகள் படிந்து பிழையாய் அவன் வழுவி யிருப்பின் எவ்வழி யும் அழி துயரங்கள் பெருகி விடும்; ஆட்சியும் கழுவி ஒழிய நேரும்; அவலக் கேடனப் அவன் பழிபட கேர்வான். கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின் ஊறின் ருகி ஆறினிது படுமே; உய்த்தல் தேற்ருன் ஆயின் வைகலும் பகைக் கூழ் அள்ளற் பட்டு மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே. (புறம், 185) உலகில் ஆட்சி முறை ஆகிய கேரைச் செலுத்துகிற அரசன் எவ்வகையிலும் தேர்ச்சி பெற்று மாட்சியுடையன யிருக்க வேண்டும்; அவ்வாறிருந்தால் அக்க ஆட்சி எவ்வழியும் செவ் வையா யினிது நடைபெறும்; அவன் மாண்பு இலணுயின் அது பிழையாயிழிந்து அழிவில் வீழ்ந்துவிடும் என அரசு நிலையை விழிதெரிய விளக்கிப் பேனும் முறையை இது துலக்கியுள்ளது. தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் தனது உரிமையை மகனிடம் தரும்பொழுது ஆட்சி நிலைமையை இவ் வாறு காட்சிப் படுத்தியருளினன். தேரைச் செலுத்தும் சாரதி போல் அரசன் பாரைச் செலுத்துகிருன். பாகன் பிழை படின் தேர் பாழாம்; அரசன் வழுவுமின் பார் பாழாம். ஒரு புகை வண்டியைச் செலுத்திச் செல்லுகிற சாரதி குடி வெறியகுய்த் தவறுபடின் வண்டிகள் நொறுங்கிப்போம்; ஏறிச் சென்ற சனங்களும் அல்லலுழந்து அலமந்து அழிவர்; මුං காட்டை ஆளுகிற அரசன் ஆட்சியை மாட்சிமையோடு நன்கு செலுத்த வில்லையானல் காடு காசமாம்; குடிசனங்களும் படுதுயரங்களை அடைவர். தேரும் பாரும் ஊர்பவரால் ஒளி பெறுகின்றன. ஆர்வலம் சூழ்ந்த ஆழி அலைமணித் தேரை வல்லான் நேர்கிலத்து ஊருமாயின் டுேபல் காலம் செல்லும்; ஊர்கிலம் அறிதல் தேற்ருது ஊருமேல் முறிந்து விழும் தார்கில மார்ப! வேந்தர் தன்மையும் அன்ன தாமே. (சீவகசிந்தாமணி) - தி அரசுரிமையைத் தன் மகனுக்கு அருள நேர்ந்த சீவக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/356&oldid=1326922" இலிருந்து மீள்விக்கப்பட்டது