பக்கம்:தரும தீபிகை 5.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ. ர சு 1897 அரசு ஆதரவு புரியும் இனிய நீர்மைக்கு மரம் கனி உவமையாப் வந்தது. சீர்மையான அதன் இயல்புகளை யெல்லாம் கூர்மையா ஒர்ந்து பொருள் நிலையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். உறவுரிமைப் பிணைப்புகளால் மனித சமுதாயம் இனிது இயங்கி வருகிறது. பிள்ளையைத் காப் பேணுவதும், மனேவியைக் கணவன் ஆதரிப்பதும் முதலிய பாசத் தொடர்புகள் யாண்டும் படர்ந்து தொடர்ந்திருக்கின்றன. அங்கத் தொடர்புகளால் உல கம் தொடர்ந்து நடந்து முறையே துலங்கி வருகிறது. ஒரு நாட்டில் வாழும் மாந்தர் அதனை ஆண்டு வரும் அரச னுக்கு உரிமையான பிள்ளைகள் போல்பவர் ஆதலால் அவரை எவ்வழியும் இனிது பேனும் கடமையை அவன் உடையவன கின்ருன். ஆகவே யாவரையும் அன்புரிமையோடு அவன் ஆக ரிக்க நேர்கின்ருன். செய்யும் ஆதரவளவே சீர்மை சேர்கின்றது. தான் வருக்தி முயன்று தன் குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு குடும்பத் தலைவனைப்போல் தன் தேச மக்களை அரசன் பாசத்தோடு பாதுகாத்து வருகிருன், பிறப்புரிமையான கடப் பாடாப் அது அவனுக்குச் சிறப்பு நிலையில் அமைந்திருக்கிறது. தான் என்ன இன்னல்களை அடைந்தாலும் தன்னை அடைக் தவரை இனிது ஆகளிப்பவனே உயர்ந்த மன்னனப் ஒளிபெற்று நிற்கின்ருன். அன்னவனை யாவரும் தம் இன்னுயிரா எண்ணி ஏத்தி வருகின்றனர். ஆட்சிஇனியகேல்மாட்சிகள்மருவுகின்றன. முன்னுளில் இந்நாட்டில் அரசு புரிந்து வக்க அர சர்களிடம் அரிய பல நீர்மைகள் அமைந்திருந்தன. அவருள் ஒரு மன்னனு டைய பண்பாடுகளை அயலே வரும் கவியில் காண வருகிருேம். இருமுந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் வளி வழங்கு திசையும் வறிது நிலை இய காயமும் என்ருங்கு 5 அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை அறிவும் ஈரமும் பெருங்க ைேட்டமும் சோறு படுக்கும் தீயோடு செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிதுதெறல் அறியார் கின்னிழல் வாழ்வோரே, 238

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/358&oldid=1326924" இலிருந்து மீள்விக்கப்பட்டது